ரஜினி மகள் பகிர்ந்த பழைய போட்டோ...கலங்கும் ரசிகர்கள்
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக நேற்று அறிவித்தனர். தனுஷின் இந்த எதிர்பாராத அறிவிப்பால் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களின் வேதனையை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.
தனுஷின் விவாகரத்திற்கு என்ன காரணம் என சில பேசிக் கொண்டிருந்தாலும், பலரும் அது பற்றி பேச வேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என கூறி வருகின்றனர். தனுஷ் தற்போது நடிக்கும் படங்களை முடித்த பிறகு மனைவியுடன் மீண்டும் சேர்ந்து விடுவார் என ஒரு சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினி வசனங்களால் ஆறுதல்
விவாகரத்து விஷயத்தை விட ரஜினியின் மனநிலையை நினைத்து தான் பெரும்பாலானவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ரஜினி நடித்த படங்களில் வரும் வசனங்களை வைத்தே அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்; ஆனால் கைவிட மாட்டான். எந்த பிரச்சனை வந்தாலும்...போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என நினைத்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற வசனங்களை சொல்லி ஆறுதல் கூறி வருகின்றனர்.

வைரலாகும் போட்டோஸ்
ரஜினி - தனுஷ் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள், தனுஷின் குடும்ப போட்டோ, மனைவி ஐஸ்வர்யாவுடன் இருக்கும் பழைய வீடியோக்கள், ரஜினி மற்றும் தனுஷ் கலங்கி கண்ணீர் விடும் சினிமா க்ளிப்பிங் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அன்பானவர்களை பிரிவது மரணத்தை விட கொடுமையானது என உணர்வு ரீதியாகவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

மனவருத்தத்தில் ரஜினி
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து முடிவால் ரஜினி அப்செட்டில் இருப்பதாகவும், ரஜினி குடும்பமே மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் ரஜினியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

செளந்தர்யா வைத்த போட்டோ
இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய Profile photo ஒன்றை மாற்றி உள்ளார். ரஜினி இளமை காலத்தில் தனது இரண்டு மகள்களையும் கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோவை தான் செளந்தர்யா தற்போது profile போட்டோவாக மாற்றி உள்ளார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் மேலும் வேதனை அடைந்துள்ளனர்.
Recommended Video

ரஜினியை நினைத்து கவலை
இந்த சமயத்தில் ஏன் மேடம் இந்த போட்டோவை மாற்றி உள்ளீர்கள். பார்க்கவே கஷ்டமாக உள்ளது. தலைவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என ரஜினி பற்றி தான் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











