»   »  கபாலி, தெறி, 24 :எந்தப் படத்திற்காக ரசிகர்கள் வெய்ட்டிங்?.. ஒன் இந்தியா கருத்துக்கணிப்பு

கபாலி, தெறி, 24 :எந்தப் படத்திற்காக ரசிகர்கள் வெய்ட்டிங்?.. ஒன் இந்தியா கருத்துக்கணிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகத் திகழும் ரஜினி, விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இதில் ரஞ்சித் -ரஜினி கூட்டணியில் கபாலி, விஜய்-அட்லீ கூட்டணியில் தெறி, சூர்யா-விக்ரம் குமார் கூட்டணியில் 24 படங்கள் உருவாகியுள்ளன.


தெறி படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவாகி விட்ட நிலையில் மற்ற 2 படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் இன்னும் முடிவாகவில்லை.


இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படமெது? என்று ஒன் இந்தியா ரசிகர்களிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தினோம்.


13,௦௦௦க்கும் அதிகமான வாசகர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். முடிவுகள் உங்களுக்காக..


24

24

சூர்யா-விக்ரம் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் 24 படம் 12% வாக்குகளுடன், கருத்துக்கணிப்பில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடித்திருக்கும் இப்படம் டைம் டிராவல் அடிப்படையில் உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டிரெய்லர் ஆகியவற்றை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.


தெறி

தெறி

அடுத்த வாரம் வெளியாகும் தெறி 29% வாக்குகளைப் பெற்று 2 வது இடத்தைப் பிடித்துள்ளது. டீசர், டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்த நிலையில் படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். போக்கிரி, ஜில்லாவைத் தொடர்ந்து காக்கிச்சட்டை மாட்டியிருக்கும் விஜய் தெறிக்க விடுவாரா? என்று பார்க்கலாம்.


கபாலி

கபாலி

ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் கபாலி சுமார் 59% வாக்குகளுடன் முதலிடத்தைக் கைபற்றியுள்ளது. சுமார் 7670 ரசிகர்கள் கபாலி படத்திற்காக தாங்கள் காத்திருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.


டீசர், டிரெய்லர்

டீசர், டிரெய்லர்

டீசர், டிரெய்லர், வெளியீட்டுத் தேதி வெளியாகாத நிலையிலும் கூட, கபாலி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி இப்படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருக்கிறார். ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் கபாலியில் நடித்துள்ளனர்.


விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.English summary
Kabali, Theri, 24 Which Movie Most Favourite? Fans Selecting Rajini's Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil