ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அணிந்துள்ள சிலுவை...கேள்வி கேட்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகை சமந்தாவை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவாகரத்தை அறிவித்த பிறகு என்ன செய்தாலும் அது டிரெண்டிங் ஆகி விடுகிறது. அவர் என்ன செய்தாலும் அது உடனே பரபரப்பான செய்தியாகி வருகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஜனவரி மாதம் தங்களின் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்தனர். அதற்கு பிறகு தான் இயக்கி வந்த பயணி மியூசிக் வீடியோவில் கவனம் செலுத்த துவங்கினார் ஐஸ்வர்யா.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

ஐதராபாத்தில் டைரக்ஷனில் பிஸியாக இருந்த ஐஸ்வர்யா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அதிலிருந்து மீண்டும் ஷுட்டிங்கிற்கு திரும்பிய ஐஸ்வர்யா, போஸ்ட் கோவிட் பாதிப்புக்களால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்த படி ஐஸ்வர்யா போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் செம வைரலாகின.

தனுஷிற்கு தான் இந்த போஸ்டா

தனுஷிற்கு தான் இந்த போஸ்டா

மகளிர் தினத்திற்கு இவர் போட்ட போஸ்ட், தனுஷை மறைமுகமாக தாக்குவதாக இருந்தது. இந்த சலசலப்பு ஓய்வதற்குள் ஐஸ்வர்யா இயக்கிய பயணி மியூசிக் ஆல்பத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு, மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் தனுஷும் ஃபிரண்ட் என குறிப்பிட்டு ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்த ரசிகர்கள், என்னது ஃபிரண்டா என கேட்டு ஷாக் ஆகினர்.

என்னது ஃபிரண்டா

என்னது ஃபிரண்டா

தனுஷின் வாழ்த்திற்கு ஐஸ்வர்யாவும் கூலாக நன்றி என சொன்னார். தனுஷ் ஃபிரண்ட் என குறிப்பிட்டு வாழ்த்து சொன்னதால், ஐஸ்வர்யா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் தனது பெயரில் இருந்து தனுஷ் பெயரை அகற்றி விட்டதாக தகவல் பரவியது. ஆனால் தற்போது வரை தனது பெயரை தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி உள்ளாரே தவிர, Profile name ஐஸ்வர்யா கே தனுஷ் என்று தான் உள்ளது.

ஹோலி எப்பவுமே ஸ்பெஷல்

ஹோலி எப்பவுமே ஸ்பெஷல்

ஐஸ்வர்யாவின் அடுத்தடுத்த பரபரப்புக்களில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது அவர் ஹோலி கொண்டாடிய போட்டோ தான். ஹோலி தினத்தில் தான் தனது அப்பாவின் பெயரை சிவாஜி ராவில் இருந்து ரஜினிகாந்த் என டைரக்டர் கே.பாலச்சந்தர் மாற்றினார். இதனால் ஹோலி எப்போதுமே தங்களுக்கு ஸ்பெஷல் என்று ஐஸ்வர்யா போஸ்ட் போட்டிருந்தார். அதோடு தான் ஹோலி கொண்டாடிய 2 போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார்.

சிலுவை அணிந்த ஐஸ்வர்யா

சிலுவை அணிந்த ஐஸ்வர்யா

அந்த போட்டோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கழுத்தில் சிலுவை அணிந்திருந்தார். இதை வைத்து சிலுவை அணிவது ஃபேஷனா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் ஆன்மிகவாதி. அவரும் சரி, தனுஷும் சரி கழுத்தில் எப்போதும் ருத்ராட்டசம் அணியும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால் ஐஸ்வர்யா மட்டும் சிலுவை அணிந்திருக்கிறாரே. ஒருவேளை மதம் மாறி விட்டாரா. இது தான் விவாகரத்திற்கு காரணமா என புதிதாக மற்றொரு காரணத்தை நெட்டிசன்கள் கிளப்பி விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X