தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி... ரஜினியை நினைத்து கவலைப்படும் ரசிகர்கள்

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து திரையுலகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினிக்கு இந்த விவகாரத்தில் அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளனர். இருவருக்குள்ளும் சமீப ஆண்டுகளாக புகைச்சல் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களின் இந்த முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

கூட்டாக அறிவிப்பு

கூட்டாக அறிவிப்பு

இருவரும் சிறப்பான நண்பர்களாக தோள் கொடுத்து வாழ்ந்ததாகவும் தற்போது இந்த முடிவு தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள தங்களுக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் வருத்தம்

ரஜினிகாந்த் வருத்தம்

இந்நிலையில் இந்த முடிவால் மிகுந்த மனஉளைச்சலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இரண்டாவது மகள் சவுந்தர்யாவிற்கு விவாகரத்து நடந்து அவருக்கு மீண்டும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் வருத்தம்

ரஜினிகாந்த் வருத்தம்

சவுந்தர்யாவின் விவாகரத்து முடிவால் ரஜினிகாந்த் மிகுந்த வருத்தத்தில் காணப்பட்டார். தொடர்ந்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் அதிலிருந்து மீண்ட சம்பவங்களும் நடந்தேறியது. இந்நிலையில் மூத்த மகளும் விவாகரத்து முடிவை தற்போது எடுத்துள்ளார்.

பேரன்கள் மீது பாசம்

பேரன்கள் மீது பாசம்

தனுஷ் -ஐஸ்வர்யாவின் மகன்கள் மீது ரஜினிகாந்த் மிகுந்த பாசத்துடன் காணப்படுகிறார். சமீபத்தில் அண்ணாத்த படத்தை தன்னுடைய பேரன்களுடன் சென்று கண்டுகளித்த சம்பவமும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அவர்களின் எதிர்காலம் குறித்து கவலைகொள்ளாமல் தனுஷ் -ஐஸ்வர்யா இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர்.

ரஜினி யோசனை

ரஜினி யோசனை

தன்னுடைய பேரன்கள் மீது மிகுந்த பாசம் கொண்ட ரஜினிக்கு, தற்போது அவர்கள் குறித்த கவலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆயினும் தனுஷ் -ஐஸ்வர்யாவின் முடிவை மாற்ற முடியாது என்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ரஜினி யோசிப்பார் என்று தெரிகிறது.

Recommended Video

Dhanush & Aishwarya Announced their Separation | தலைவர் வருந்தபடுவார்!!
ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

தன்னுடைய சினிமா கேரியரில் சிறப்பான பல முடிவுகளை மிகவும் வலிமையுடன் எடுக்கும் ரஜினியின் சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்து இத்தகைய சோதனைகள் வருவது குறித்து அவரது ரசிகர்கள் தற்போது சமூகவலைதளங்கள் மூலம் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மனவலிமைக்கு பிரார்த்தனை

மனவலிமைக்கு பிரார்த்தனை

இத்தகைய மனவேதனையுடன்தான் கடந்த பொங்கலன்று ரசிகர்களை சந்தித்தாரா ரஜினிகாந்த் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்கள் ரஜினி ரசிகர்கள். இந்த நேரத்தில் அவருக்கு மனவலிமை கிடைக்கட்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள்

சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள்

மேலும் தன்னுடைய கேரியரில் பெரிய அளவில் சாதித்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கடவுள் அவரை அளவுக்கதிகமாக சோதிப்பதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இத்தகைய ட்வீட்கள் ட்ரெண்டாகி வருகிறது.

ரஜினி குறித்து வருத்தம்

ரஜினி குறித்து வருத்தம்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வது குறித்த வருத்தம் ரஜினி ரசிகர்களுக்கு இருப்பதை காட்டிலும் இந்த நேரத்தில் தங்களது விருப்பத்திற்குரிய நடிகரின் மனவருத்தமே அவர்களுக்கு பெரிதாக தெரிவது அவர்கள் அவர் மீது வைத்துள்ள அளவுக்கு அதிகமான அன்பையே வெளிக்காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X