பொன்னியின் செல்வனை கொண்டாடும் ரசிகர்கள்...டிரெண்டிங்கில் கலக்கும் மணிரத்னம்
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மிக பிரம்மாண்டமாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அடுத்தாக பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் படத்தின் ஆடியோ எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை வெளியான தகவலின் படி, பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலரை வெளியிட உள்ளதாக சொல்லப்டுகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, எஸ்.எஸ்.ராஜமெளலி உள்ளிட்டோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை பொன்னியின் செல்வன் ஆடியோ விழா பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இன்று காலை முதலே #PonniyinSelvan, #ManiRatnam போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி வருகின்றன. இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது தான். ஃபர்ஸ்ட் சிங்கிள், வந்தியத்தேவன் ரோலில் நடித்துள்ள கார்த்திக்காக உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது செகண்ட் சிங்கிள் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்துள்ள விக்ரமிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
சோழா சோழா என துவங்கும் இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. ஆதித்ய கரிகாலனை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக தான் டிரெண்டிங்கை ரசிகர்கள் கலக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











