For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'இது நம்ம ரமணா இல்ல வேற ரமணா...' - கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்ஸ்

  By Vignesh Selvaraj
  |

  சென்னை : தமிழ்த் திரைப்படங்களை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுவந்த TamilGun என்ற இணையதளத்தின் அட்மின்களில் ஒருவர் நேற்று சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  முதலில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் தான் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் பரவியது. ஆனால் பின்னர் அது TamilGun அட்மின் என விளக்கம் அளித்துள்ளனர்.

  அவரது பெயர் கௌரிஷங்கர் எனவும், இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. சினிமா பைரசிக்கு எதிராக முதல் வெற்றி என சினிமாத்துறையில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  தமிழ் ராக்கர்ஸ் மறுப்பு :

  கைது செய்யப்பட்டதாக தகவல் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டரில் இது பொய்யான செய்தி என ட்வீட் போட்டிருந்தார்கள். 'தமிழ் ராக்கர்ஸ் கெத்து' என நெட்டிசன்கள் மீம்களையும் ஷேர் செய்து வருகிறார்கள்.

  ஃபேக் நியூஸ் :

  'ஃபேக் நியூஸை பரப்பி தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களை வெறுப்பேத்துறீங்களா... துப்பறிவாளன் படம் தமிழ் ராக்கர்ஸ்ல வரப்போகுது' என ரிப்ளை செய்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  தமிழ் கன் அட்மினும் இல்லையாம் :

  யாரோ ஒரு அப்பாவியைப் பிடிச்சு #tamilgun adminனு வச்சிருக்கீங்களேயா இவங்களை என்ன பண்ணலாம்..?

  தனி ஒருவன் தமிழ் ராக்கர்ஸ் :

  'தனி ஒருவன்' படத்தில் அரவிந்த்சாமி சிறுவயதில் சமோசாவைத் திருட பயன்படுத்தும் டெக்னிக்கை தமிழ் ராக்கர்ஸ் பயன்படுத்திருப்பதாகக் கலாய்த்திருக்கிறார் ஒரு நெட்டிசன்.

  இந்தியன் தாத்தா :

  'இந்தியன்' படத்தில் இந்தியன் தாத்தா கமலை தமிழ் ராக்கர்ஸ் அட்மின் என உருவகித்திருக்கிறார்கள் ரசிகர்கள். குபீர்!

  விஷால் பப்ளிசிட்டியா?

  திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர், 'தமிழ் ராக்கர்ஸ் குழுவின் ஐ.பி அட்ரஸ் ஸ்காட்லாந்திலிருந்து செயல்படும்போது திருவல்லிக்கேணியில் எப்படி அட்மினை கைது செய்ய முடியும்? இது விஷால் துப்பறிவாளன் படத்தின் பப்ளிசிட்டிக்காக செய்த வேலை' என ட்வீட் செய்திருக்கிறார்.

  திருட்டு வி.சி.டி வித்தவர் :

  பர்மா பஜார் பக்கத்துல விசிடி வித்துட்டு இருந்தவரைப் புடிச்சுட்டு விஷால் தமிழ் ராக்கர்சைப் புடிச்சிட்டார்னு சொன்னது யாரும்மா ?

  அசால்ட் சேது :

  'ஜிகர்தண்டா' படத்தில் பாபி சிம்ஹா அசால்ட் சேதுவாக அசால்ட் செய்யும் காட்சிகளை வைத்து மீம் உருவாக்கி இருக்கிறார்கள் தமிழ் ராக்கர்ஸ் ஆதரவாளர்கள்.

  சூனா பானா :

  யார் கைது செய்யப்பட்டது... உண்மையான தகவலா எனப் பலரும் குழம்பிக்கொண்டிருக்க தமிழ் ராக்கர்ஸின் ட்வீட் 'ம்ம் கெளம்பு கெளம்பு... பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு' எனச் சொல்வதைப் போல இருக்கிறது என ஒருவர் ஷேர் செய்திருக்கிறார்.

  பில்லா இல்ல :

  'தலைநகரம்' படத்தில் பில்லா என நினைத்து ஆற்றில் குதித்த வடிவேலுவைக் கைது செய்து போலீஸ் விசாரிப்பதைப் போல இருக்கிறதாம்.

  பார்த்திபன் - வடிவேலு :

  'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் பார்த்திபனிடம் சிக்கிக்கொண்டு அல்லல்படும் வடிவேலுவைப் போல விஷால் தமிழ் ராக்கர்ஸிடம் சிக்கிக் கொண்டுள்ளாராம்.

  பாகுபலி :

  அடேய்! சிங்கத்த செல்லுல அடைச்சா அது செல்லையே செதச்சுடும் பரவால்லயா... நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் முடியாது!

  சிவாஜி மொமென்ட் :

  திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் இதுதான் நடக்கும் என சிவாஜி படத்தில் வரும் காட்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'என்னால இவரை அடிக்க முடியாது சார்... ஏன்னா...'

  அது அவர் இல்லையாம் :

  பெரிய பைரசி தளத்தை விட்டுவிட்டு வேறு ஒருவரைக் கைது செய்ததை காமெடியாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

  எந்திரன் :

  'என்னை யாராலயும் அழிக்க முடியாது' என எந்திரன் சிட்டி ரோபோ சொல்வதைப் போல தமிழ் ராக்கர்ஸ் அட்மின் சொல்வதாக மீம் பகிர்ந்துள்ளார்கள்.

  English summary
  The news spread that TamilGun's admin was arrested by the Chennai police. The TamilGun and Tamilrockers sites have posted that the prisoner is not tehir Admin.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X