பிஎம்டபிள்யூ பைக்...அஜித் பயன்படுத்திய கார் பேரு என்னங்க...தீயாய் தேடும் ரசிகர்கள்

சென்னை : அஜித் ஐரோப்பாவில் டூர் சென்ற போட்டோக்கள் தான் கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகிறது. இந்த போட்டோக்கள் தான் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

2019 ம் ஆண்டு முதல் போராடி ஒரு வழியாக ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவான வலிமை படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்தனர். அப்டேட் கேட்டே அலுத்து போய் காத்திருந்த ரசிகர்கள் வலிமை படத்தை திருவிழாவாக கொண்டாடினர்.

வலிமை ஃபர்ஸ்ட்டே ஃபர்ஸ்ட் ஷோவை சென்னையில் பார்க்க வந்த போனி கபூரே ரசிகர்கள் படத்திற்கு அளித்த வரவேற்பை பார்த்து மிரண்டு போய் விட்டார். அதிகாலை 4 மணிக்கே இப்படி ஒரு ரசிகர் கூட்டமா என அவரே தனது ஆச்சரியத்தை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கவனமாக காய் நகர்த்தும் வினோத்

கவனமாக காய் நகர்த்தும் வினோத்

வலிமை படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியை பெற்று ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த ஆண்டில் 200 கோடி கிளப்பில் இணைந்த முதல் தமிழ் படம் வலிமை தான். வலிமை தந்த வெற்றியை தொடர்ந்து, அதே உற்சாகத்துடன் ஏகே 61 படத்தின் வேலைகளை துவக்கினார்கள். இருந்தாலும் வலிமை படத்திற்கு கிடைத்த சில மோசமான விமர்சனங்களையும் மனதில் வைத்தே வினோத், ஏகே 61 படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

அஜித் இரட்டை வேடம் கிடையாது

அஜித் இரட்டை வேடம் கிடையாது

சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள வங்கி கிளை ஒன்றில் நடக்கும் வங்கிக் கொள்ளை தான் ஏகே 61 படத்தின் கதைக்கரு. இந்த வங்கிக் கொள்ளையுடன் அஜித்தின் கேரக்டர் எப்படி தொடர்புடையதாகிறது என்பது படத்தின் கதை. இந்த படத்தில் அஜித் வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிக்கிறார். ஹீரோ - வில்லன் இரண்டுமே அஜித் தான் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மஞ்சு வாரியர் வந்துட்டாரா

மஞ்சு வாரியர் வந்துட்டாரா

ஏகே 61 படத்தில் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் ஏகே 61 ஷுட்டிங்கில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இதில் ஹீரோ அஜித்திற்கு இணையான ரோல் மஞ்சு வாரியருக்கும் வழங்கப்பட்டுள்ளதாம். மிக வெயிட்டான ரோல் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் ஒப்புக் கொண்டாராம். விரைவில் இவர் நடிக்கும் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாம்.

அஜித் ஷுட்டிங்கிற்கு போகலியா

அஜித் ஷுட்டிங்கிற்கு போகலியா

ஏகே 61 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு போன்று அமைக்கப்பட்ட செட்டில் 47 நாட்கள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட ஷுட்டிங் புனேயில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதே சமயத்தில் அஜித் கிளம்பி, ஐரோப்பாவில் பைக் ட்ரிப் சென்று விட்டார். இதனால் ஏகே 61 ஷுட்டிங் நிறுத்தப்பட்டதா, ஷுட்டிங்கில் கலந்து கொள்ளாமல் அஜித் ஐரோப்பா டூர் போய் விட்டாரே என பல விதமான கேள்விகள் எழுந்தன. ஆனால் விசாரித்ததில், அஜித் தான் நடிக்க வேண்டிய சீன்கள் பெரும்பாலும் முடித்து விட்டாராம். இன்னும் ஒரு சில சீன்கள் மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுகிறது.

எப்போ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

எப்போ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

படத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்ட நிலையில், அஜித் தவிர மற்ற நடிகர்கள் நடிக்கும் சீன்களை தான் தற்போது படக்குழு படமாக்கி வருகிறதாம். ஐரோப்பா ட்ரிப் முடித்து வந்ததும் மீதமுள்ள சீன்களில் நடித்து விட்டு, டப்பிங் வேலைகளை அஜித் துவக்குவார் என கூறப்படுகிறது. ஜுலை மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு டைட்டிலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் தரப்பில் அது பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஐரோப்பாவில் அஜித்தின் ஜாலி டூர்

ஐரோப்பாவில் அஜித்தின் ஜாலி டூர்

ஐரோப்பாவில் தனது ஃபேவரைட்டான பிஎம்டபிள்யூ பைக்கில் தான் அஜித் ஜாலி ரைடு சென்றார். பைக்குடன் இருக்கும் அஜித் போட்டோக்கள், தனது பைக்கிற்கு தானே பெட்ரோல் போடுவது உள்ளிட்ட அஜித் போட்டோக்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் நகரில் மிக சாதாரணமாக சாலைகளில் நடந்து சென்று, ஊரை சுற்றிய அஜித்தின் போட்டோக்கள் வெளியாகி டிரெண்டாகின. அதற்கு பிறகு கப்பலில் ஆங்கில கால்வாயை கடக்கும் அஜித்தின் போட்டோக்கள் வெளியாகின.

அஜித் வைத்துள்ள கார் பேரு என்ன

அஜித் வைத்துள்ள கார் பேரு என்ன

தற்போது லேட்டஸ்டாக ஐரோப்பாவில் செம கூலாக கார் அருகே நின்று போஸ் கொடுப்பது, ரெஸ்டாரன்ட், பார்க் ஆகியவற்றில் போஸ் கொடுப்பது போன்ற அஜித்தின் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. இதனை #AK61 ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் செம டிரெண்டாக்கி வருகின்றனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அஜித் அசத்தலாக போஸ் கொடுத்திருக்கும் காரின் பெயர் என்ன, அதன் விலை என்ன, ஸ்பெஷாலிட்டி என்ன என்பது பற்றி ரசிகர்கள் ஆர்வமாக தேடி வருகின்றனர்.

இந்த காரில் இவ்வளவு இருக்கா

இந்த காரில் இவ்வளவு இருக்கா

அஜித் போஸ் கொடுத்திருக்கும் காரின் பெயர் McLaren. உலகின் டாப் 10 காஸ்ட்லி கார்களில் இதுவும் ஒன்று. இதன் விலை ரொம்ப அதிகம் ஒன்றும் கிடையாது. இந்திய மதிப்பில் ரூ.13 கோடி சம்திங் தான். ஆரம்பத்தில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனமும் இந்த நிறுவனமும் ஒன்றாக சேர்ந்து தான் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன. இந்த காரில் ஆட்டோ பார்க்கிங் சென்சார், கேமிரா உள்ளிட்ட லேட்டஸ்ட் டெக்னாலஜிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. காஸ்ட்லி ஸ்போர்ட்ஸ் கார் இது.

இந்தியாவில் யாரிடம் உள்ளது

இந்தியாவில் யாரிடம் உள்ளது

இந்த கார் இந்தியாவில் ஒரே ஒருவரிடம் தான் உண்டு. அது வேறு யாருமில்லை பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யான் தான். இந்த காரை Bhool Bhulaiyaa 2 படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக அதன் டைரக்டர் பூஷண்குமார் கார்த்திக்கிற்கு பரிசாக சமீபத்தில் வழங்கினார். படத்திற்காக கார்த்திக்கின்ற கடின உழைப்பை பாராட்டி இந்த காரை பரிசாக வழங்கி உள்ளார்.

ரசிகர்களுக்கு செம ட்ரீட்

ரசிகர்களுக்கு செம ட்ரீட்

விரைவில் அஜித் ஐரோப்பா ட்ரிப்பை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப உள்ளாராம். வந்ததும் ஏகே 61 படத்தில் மீதமுள்ள காட்சிகளை முடித்து விட்டு, அடுத்தபடியாக ஏகே 62 படத்திற்காக தயாராக போகிறாராம். தீபாவளி ரிலீஸ் என ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்த ஏகே 61 படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளி போகிறது என்ற தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகி இருந்த சமயத்தில், அவர்களை குஷிப்படுத்தும் விதமாக அஜித்தின் ஐரோப்பா ட்ரிப் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி கலக்கி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X