டிரைலரே வராது மா...உளறிய வெங்கட் பிரபு...அதிர்ந்து போன ரசிகர்கள்

சென்னை : அரசியல் த்ரில்லர் படமான மாநாடு படத்தின் வேலைகளை ஏற்கனவே முடித்த விட்டார் டைரக்டர் வெங்கட் பிரபு. சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் மாநாடு படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட்டை டைரக்டர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் ட்விட்டரில் வெளியிட்டு வந்தனர். ஆனால் மாநாடு, தீபாவளிக்கு ரிலீசாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு யாரும் வாய் திறக்கவில்லை. படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளிவர உள்ளதாக வெங்கட் பிரபு கூறி இருந்தார். ஆனால் அதற்கு பிறகு அது பற்றி எந்த தகவலும் இல்லை.

டிரைலரே வராது மா

டிரைலரே வராது மா

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் பழக்கம் கொண்ட வெங்கட் பிரபு, சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், மாநாடு டிரைலர் எப்போது வரும் என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு தவறுதலாக, டிரைலரே வராது மா என்றார். இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகினர். என்ன இது டைரக்டரே இப்படி சொல்றாரே என குழப்பமடைந்து, ஏன் என காரணம் கேட்க துவங்கினர்.

மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு

மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு

இதனால் சிறிது நேரத்திலேயே தான் தவறாக பதில் பதிவிட்டதை உணர்ந்த வெங்கட் பிரபு, அதற்காக மன்னிப்பு கேட்டார். அதோடு, டிரைலர் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். இதனால் மாநாடு டிரைலர் வெகு விரைவில் வர உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த டிரைலர் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வித்தியாசமான வீடியோவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வீடியோ படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

ரஜினியுடன் மோதும் சிம்பு

ரஜினியுடன் மோதும் சிம்பு

அதோடு மாநாடு படம், ரஜினியின் அண்ணாத்த படத்துடன் நவம்பர் 4 ம் தேதி தீபாவளிக்கு மோத உள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களை பயங்கர த்ரில் ஆக்கி உள்ளது. இருவரில் யாருடைய படம் அதிக வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற ஹீரோக்களின் படங்கள் வெளிவராத போது, ரஜினி பட ரிலீஸ் உறுதியானது தெரிந்தும் சிம்பு படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

சோஷியல் மெசேஜ்

சோஷியல் மெசேஜ்

மாநாடு படத்தில் இஸ்லாமிய இளைஞர் ரோலில் நடித்துள்ளார் சிம்பு. பயங்கரவாதம் மற்றும் அரசியல் தொடர்பான சோஷியல் மெசேஜ் சொல்வதாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X