என்னது ரூ.2 லட்சத்திற்கு ஃபிரிட்ஜா? இணையத்தை அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

சென்னை : விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் கூட்டுக்குடும்பத்தின் நன்மை, சகோதர ஒற்றுமை உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.

Recommended Video

Bhakyalakshmi | விவாகரத்து.. கொடுக்க முடிவெடுத்த Bakiya, என்ன இப்படி ஆயிடுச்சு! *TV

இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் ஹேமா ராஜ்குமார்.சின்னத்திரையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இன்ஸ்டாகிராமிலும் இவர் வெளியிடும் போட்டோஷுட் போட்டோக்கள் டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பதாக இருக்கும். செம அழகாக இவர் வெளியிடும் போட்டோ, ரீல்ஸிற்கு லைக்குகள் தாறுமாறாக குவியும்.

Fans surprised on Pandian Stores Meenas new costly fridge price

ஹேமா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டும் தான். ஆனாலும் அவர் பயங்கர பிஸி. ஒரு பக்கம் சீரியல் ஆக்டிங், மறுபக்கம் யூடியூப் வீடியோ என பறந்து கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் ஷாப்பிங், மேக்கப், டூர், லைவ் என வெரைட்டி வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இதன் மூலம் நல்ல வருமானத்தையும் பெற்று வருகிறார்.ஹேமாவின் இந்த யூடியூப் சேனலில் அனைத்து விதமான வீடியோக்களையும் பார்க்கலாம். அந்த வகையில் தற்போது ஹேமா ரூ.2 லட்சம் கொடுத்து பிரிட்ஜ் வாங்கி, அதை பிரிட்ஜ் டூர் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது வீட்டில் 15 வருடங்களாக இருக்கும் பழைய பிரிட்ஜியை காட்டி விட்டு அதற்கு பதில் தற்போது புதியதாக வங்கியுள்ள பிரிட்ஜை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

அதன் பின்பு அந்த பிரிட்ஜில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பொறுமையாக எடுத்து சொல்லி அதை வீடியோவாகவும் காட்டுகிறார். ஹேமா வாங்கி இருப்பது ஸ்மார்ட் பிரிட்ஜ். அதில் ப்ளூடூத், வைஃபை வசதிகளும் இருக்கின்றன.இதனால் தான் இந்த விலை எனவும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

இந்த காஸ்ட்லியான பிரிட்ஜை வைத்து டூர் வீடியோவும் செய்து முடித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மீனாவிடம் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.ஒரு வீடியோ வெளியிடவா ரூ.2 லட்சம் கொடுத்து ஃபிரிட்ஜ் வாங்கி இருக்கீங்க? இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. சீரியலில் தான் உங்க கேரக்டர் அப்படி என பார்த்தால் நிஜத்திலும் அப்படித்தானா? என பலர் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X