»   »  ஏடிஎம் வரிசையில் செல்ஃபி: ரசிகையின் ட்வீட்டால் அசிங்கப்பட்ட சீனியர் நடிகர்

ஏடிஎம் வரிசையில் செல்ஃபி: ரசிகையின் ட்வீட்டால் அசிங்கப்பட்ட சீனியர் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் அனில் கபூர் ஏடிஎம் வரிசையில் நிற்கும்போது எடுக்கப்பட்ட செல்ஃபியை ட்விட்டரில் போட்டு அசிங்கப்பட்டுள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அதில் இருந்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை பார்க்க முடிகிறது.

Fans take selfie with Anil Kapoor while standing in ATM queue

அதிலும் ஏடிஎம்களில் எந்நேரம் பார்த்தாலும் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் ஏடிஎம் வரிசையில் நின்றபோது ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் போட்டார்.

அந்த ட்வீட்டை பார்த்த அனில் மோடியின் நடிவடிக்கைக்கு நன்றி உங்களை போன்ற நல்லவர்களை சந்திக்க முடிந்தது என்று ட்வீட்டினார்.

அதை பார்த்த பலரும் சார் நீங்கள் கிரேட். எத்தனையோ பிரபலங்கள் வரிசையில் நிற்க புலம்பிக் கொண்டிருக்கும்போது நீங்கள் இப்படி சிரித்தபடி நிற்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆளாளுக்கு அனிலை புகழ்ந்தார்கள்.

இதை பார்த்து அனிலுடன் செல்ஃபியில் இருந்த ரசிகை ஒரு ட்வீட்டை போட்டு பொசுக்கென்று அசிங்கப்படுத்திவிட்டார். மோடி விஷயத்தால் ஏற்பட்டுள்ள வலியை உணர்த்தும் புகைப்படம் அல்ல. அது 5 ஸ்டார் ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்றார்.

English summary
Bollywood actor Anil Kapoor obliged to fans request to take a selfie while standing in an ATM queue in Mumbai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos