என்னது...கமலுக்கு டைரக்டர் ஹரி வாழ்க்கை கொடுத்தாரா?...கொல காண்டான கமல் ஃபேன்ஸ்

சென்னை : வழக்கம் போல் ப்ளுசட்டை மாறன் மீண்டும் தன் வேலையை காட்ட துவங்கி விட்டார். முன்பெல்லாம் நேரடியாக கிண்டலும் விமர்சனமும் செய்தவர் தற்போது யாரோ போட்ட மீம்ஸ் போட்டு வம்பிழுக்க துவங்கி உள்ளார்.

என்ன ஒரு வித்தியாசம் என்றால், எப்போதும் அஜித், அவரைப் பற்றிய தகவல்கள், அஜித் ரசிகர்களை தான் விமர்சனம் செய்வார். ஆனால் கடந்த சில நாட்களாக விக்ரம் படம் பற்றி பேசி கமல் ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறார்.

அதிலும் அனைவரும் கொண்டாடி வரும் விக்ரம் பற்றி பேசிவதால் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள், சினிமா ரசிகர்கள் என பலரும் கடுப்பாகி உள்ளனர். ப்ளு சட்டை மாறனை கொலவெறியுடன் திட்டி தீர்த்து வருகின்றனர்.

விக்ரம் பான் இந்தியா ஹிட் கிடையாதா

விக்ரம் பான் இந்தியா ஹிட் கிடையாதா

இரண்டு நாட்களுக்கு முன் ப்ளுசட்டை மாறன் போட்ட ட்வீட்டில், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகிய படங்கள் பான் இந்தியன் ஹிட். விக்ரம் படம் பான் சவுத் இந்தியன் ஹிட். இதுவரை மலையாளம் மற்றும் கோலிவுட் சினிமாவில் இருந்து ஒரு பான் இந்தியன் ஹிட் கொடுக்க முடியவில்லை. இனி பொன்னியின் செல்வன் அல்லது வேறு ஏதாவது ஒரு படம் தரலாம் என குறிப்பிட்டிருந்தார்.

காஷ்மீர் ஃபைல்ஸ் பான் இந்தியா ஹிட்டா

காஷ்மீர் ஃபைல்ஸ் பான் இந்தியா ஹிட்டா

இதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி, கோலிவுட்டில் ஹேராம், இந்தியன், ஜென்டில்மேன் என பல வருடங்களுக்கு முன்பே பான் இந்தியன் ஹிட் கொடுத்து விட்டார்கள். காஷ்மீர் ஃபைல்ஸ் பான் இந்தியா ஹிட் படமா. 450 கோடி வசுல் செய்த விக்ரம் ஹிட் கிடையாது. ஆனால் 350 கோடி வசுல் செய்த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பான் இந்தியா ஹிட்டா என கேட்டு வெளுத்து வாங்கி விட்டனர்.

கமலுக்கு ஹரி வாழ்க்கை கொடுத்தாரா

கமலுக்கு ஹரி வாழ்க்கை கொடுத்தாரா

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தையும் சமீபத்தில் ரிலீசான டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படத்தையும் ஒப்பிட்டு கமெண்ட் போட்டுள்ளார். யானை மற்றும் விக்ரம் போஸ்டர்களை இணைத்து, "யானை படத்தோட மட்டும் விக்ரம் வந்து இருக்கணும்...ஒரே நசுக்கா விக்ரமை நசுக்கி இருக்கும் யானை. எப்படியோ யானை படத்தை தள்ளி ரிலீஸ் செய்ததன் முலம் கமல்ஹாசன் அவர்களுக்கு இயக்குநர் ஹரி அவர்கள் வாழ்க்கை கொடுத்து விட்டார்" என போடப்பட்ட மீமை பகிர்ந்துள்ளார்.

ரஜினி ஃபேன்ஸ் பற்றி தெரியும்

ரஜினி ஃபேன்ஸ் பற்றி தெரியும்

அதுமட்டுமல்ல இந்த மீமை உருவாக்கியது ரஜினி ஃபேன்ஸ் என்றும் ப்ளுசட்டை மாறன் போட்டுள்ளார். இதை பார்த்து தான் ரசிகர்கள் ஓவராக கடுப்பாகி உள்ளனர். சரி நீ யாரு குறுக்க மறுக்க ஓடிட்டிருக்க?பேன்ஸ் என்னமோ பேசிட்டு போகட்டும். தனி மனிதர்கள் தான் எல்லாருமே. திரும்ப திரும்ப ஒரு அஜெண்டாவுக்காக பேன்ஸ தூண்டி விட்டு குளிர்காயுற வேலையெல்லாம் வச்சிக்காதடா மாறா. ரஜினி ஃபேன்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். ரஜினியும் கமலும் ஃபிரண்சுன்னும் தெரியும்.

Recommended Video

Yaanai Public Review | Arun Vijay | Dirctor Hari *Kollywood
இன்னும் 2.ஓ ரெக்கார்டு மட்டும் தான் இருக்கு

இன்னும் 2.ஓ ரெக்கார்டு மட்டும் தான் இருக்கு

உன் கருத்தை எல்லாம் ரசிகர்கள் கருத்து என்று கொண்டு வராத. எல்லா ரெக்கார்டும் காலி. இன்னும் 2.ஓ மட்டும் தான் மீதம் இருக்கு. சீக்கிரம் அதுவும் காலியாகிடும். விக்ரம் 2, இந்தியன் 2 துக்கி சாப்பிட்டிடும். அப்புறம் பார்ப்போம். 2000 க்கு தசவதாரம், 2010 ல விஸ்வருபம், இப்போ 2022 ல விக்ரம். நுற்றாண்டு ஹிட் குடுக்குறவருக்கு இவ்வளவு பேச்சா என திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X