குழந்தையை பார்க்கமாட்டேன்.. ச்ச மாதம்பட்டி ரங்கராஜுக்கு இப்படி ஒரு நிலைமையா?.. என்ன செய்யப்போறாரோ?

சென்னை: ஜாய் கிரிஸில்டாவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. எனவே மாதம்பட்டி ரங்கராஜ் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விதான் பலரிடமும் எழுந்திருக்கிறது. அவரோ வழக்கம்போல் மௌனமே காத்துவருகிறார். இது ஒருபக்கம் இருக்க சமூக வலைதளங்களில் ஜாய் கிரிஸில்டா அட்டாக் செய்துகொண்டிருக்க; ரசிகர்களும் தங்கள் பங்குக்கு அவரை கடுமையாக கலாய்த்துவருகிறார்கள்.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் அவரிடமிருந்து ஒதுங்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்ட ஜாய் முதலில் தங்கள் திருமண புகைப்படங்களை வெளியே விட்டார். அதனையடுத்து அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும்; தனது குழந்தைக்கு அவர்தான் பொறுப்பு என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இரண்டு பேரிடமும் விசாரணை: ஜாய் அளித்த புகாரின் அடிப்படையில் சமீபத்தில் ரங்கராஜிடமும், அவரிடமும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தக்கட்ட விசாரணை விரைவில் நடக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையே தனக்கு மாதா மாதம் 6.50 லட்சம் ரூபாய் பராமரிப்பு செலவுக்கு கொடுக்க வேண்டும் புதிய மனு ஒன்றையும் கிரிஸில்டா தாக்கல் செய்திருந்தார். விரைவில் அதுவும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

Fans Trolls Madhampatty Rangaraj after Joy Crizildaa gives birth to a baby boy
Photo Credit:

ஆண் குழந்தை: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிஸில்டாவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அப்படியே மாதம்பட்டி ரங்கராஜின் முகம்தான் என்று குறிப்பிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்தார். பலரும் அவருக்கும் குழந்தைக்கும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். நேற்று முன்தினம் குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவிட்டு, 'தந்தை என்ற ஸ்தானத்துக்கு ரங்கராஜுக்கு தகுதி இல்லைதான். இருந்தாலும் வலியோடு அந்த ஸ்தானத்தை கொடுக்கிறேன்' என்ற தொனியில் குறிப்பிட்டு அட்டாக் செய்திருந்தார்.

நேற்று வெளியிட்ட ஃபோட்டோ: நேற்றுகூட குழந்தையின் முகத்தை மறைத்தபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தந்தை போன்றே மகனும் போஸ் கொடுக்கிறான் என்று தெரிவித்திருந்தார். இப்படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் மகன் தொடர்பாஜ ஜாய் பதிவிட்டு வந்தாலும் ரங்கராஜோ வழக்கம்போல் அமைதியாகவே இருக்கிறார். அவர் அடுத்தக்கட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விதான் ரசிகர்களிடமும், திரைத்துறையினரிடமும் எழுந்திருக்கிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்: அவர் இந்தக் குழந்தையை ஏற்றுக்கொண்டு அனைத்துமாய் இருக்க வேண்டுமென்பதுதான் ரசிகர்களின் கோரிக்கை. இந்நிலையில் குழந்தை பிறந்ததை வைத்து மாதம்பட்டி ரங்கராஜை கலாய்க்கவும் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதாவது ஜாய் கிரிஸில்டா நேற்று போட்டிருந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்து அதில் ஒரு வீடியோவையும் இணைத்திருக்கிறார் ரசிகர் ஒருவர். அந்த வீடியோவில், ஒரு பெண்மணி நாய்க்குட்டி ஒன்றை கையில் ஏந்தி தாய் நாயிடம் காண்பிக்கிறார். ஆனால் அந்த தாய் நாயோ திரும்பிகூட பார்க்கவில்லை. அந்த தாய் நாய்தான் மாதம்பட்டி ரங்கராஜ் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த மற்றவர்களோ அய்யய்யோ மாதம்பட்டியை இப்படி கலாய்க்கிறாங்களே என்று அவர்களும் அதனை அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X