»   »  "கோடி கோடியா சம்பாதிப்பீங்க... கட்டடம் கட்ட காசு நாங்க தரணுமா..? - ரசிகர்கள் கருத்து #FilmibeatPolls

"கோடி கோடியா சம்பாதிப்பீங்க... கட்டடம் கட்ட காசு நாங்க தரணுமா..? - ரசிகர்கள் கருத்து #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. நாசர் தலைமையிலான குழு அளித்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் கட்டிட நிதி திரட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ரசிகர்களிடம் நிதி திரட்டுவதை பொதுமக்கள் பலரும் விமர்சித்தனர். மலேசிய ரசிகர்கள் அதிகம் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர கலைவிழா

நட்சத்திர கலைவிழா

நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் மலேசியா சென்றனர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். நடிகர் சங்கத்திற்காக ரஜினி, கமலிடம் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் 2.5 கோடி நிதி கொடுத்தார்.

நிதி பெறுவதில் உடன்பாடு இல்லை

நிதி பெறுவதில் உடன்பாடு இல்லை

"நாம் சம்பாதிப்பதே ரசிகர்களின் பணத்தில் தான். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நாமே பணம் போட்டு கட்டலாம். இதையும் ரசிகர்களிடம் வாங்க வேண்டாம்" என அஜித் இந்த விழா தொடர்பாக கூறினாராம். சில முன்னணி நடிகர்களின் முடிவும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது.

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

இந்நிலையில், நமது தளத்தின் வாசகர்களிடம், "நடிகர் சங்கம் கட்ட ரசிகர்களிடம் நிதி வசூலிப்பது சரிதானா?" என்றொரு கேள்வியை எழுப்பியிருந்தோம். ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

ஏமாறும் வரை பறிப்பார்கள்

ஏமாறும் வரை பறிப்பார்கள்

ரசிகர்களின் கருத்துப்படி, ஏமாறும் மக்கள் இருக்கும்வரை இப்படித்தான் சினிமாக்காரர்கள் பணம் பறிப்பார்கள் என சரிபாதிக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படிச் செய்வது நியாயமே இல்லை எனப் பலரும், நடிகர்களின் சம்பளமே ரசிகர்கள் டிக்கெட் கொடுத்துப் பார்க்கும் காசு தானே எனப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் தான் சினிமாவை வாழவைக்க வேண்டும்

ரசிகர்கள் தான் சினிமாவை வாழவைக்க வேண்டும்

நடிகர் சங்கம் ரசிகர்களிடம் நிதி திரட்டும் செயலுக்கு, "நிதி திரட்டும் பணத்தை முறையாக பயன்படுத்தினால் சரி எனக் கொஞ்சம் பேரும், ரசிகர்கள்தான் சினிமாவை வாழ வைக்கவேண்டும்" என வெகுசிலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

86% பேர் எதிர்ப்பு

86% பேர் எதிர்ப்பு

ரசிகர்களின் கருத்துகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட 86% பேர் ரசிகர்களிடம் நிதி திரட்டுவதை எதிர்த்திருக்கிறார்கள். ஏழாயிரத்து அரநூறுக்கும் மேற்பட்ட வாக்குகளில், நடிகர் சங்கத்தின் செயலுக்கு ஆதரவாக 1000 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன.

கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள்

கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள்

சினிமா டிக்கெட் கட்டண உயர்வு, நல்ல படங்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் ரசிகர்கள் சினிமா துறையினர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். கோடி கோடியாகச் சம்பாதிக்கும் நடிகர்கள் சில கோடிகளில் கட்டும் கட்டிடத்திற்கு ஏன் ரசிகர்களிடம் கையேந்த வேண்டும் என்பதே பல ரசிகர்களின் கேள்வி.

English summary
Malaysia Star art Festival was held on last week behalf of the South Indian artiste Association. Nadigar sangam has been organizing sports events and art performances in Malaysia for Fundraising. There is no expectation of support among the fans. Nadigar sangam's decision was unacceptable by fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X