வேற லெவல் வெறித்தனம்...கொளுத்திப் போட்ட பிக்பாஸ்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 தினம் தினம் காட்சிகள் மாறி வருவது போட்டியின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரிக்க துவங்கி செய்துள்ளது. ப்ரோமோக்களும் அதற்கு ஏற்றது போல் வெளியிடப்பட்டு வருகின்றன.

டிக்கெட் டு ஃபினாலேவை பெறுவதற்கான டாஸ்கில் கடும் போட்டி நடந்து வருகிறது. முதல் நாள் ஆதாரவாக, ஒற்றுமையாக இருந்தவர்களுக்கு இடையே அடுத்த நாள் மோதலை ஏற்படுத்தும் வகையில் டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊதி பெரிதாக்குவது யார்

ஊதி பெரிதாக்குவது யார்

பிக்பாஸ் நிகழ்ச்சி 86 நாட்களை கடந்து விட்ட நிலையில், 87 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் முதல் ப்ரோமோவில், டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் அடுத்த இரண்டு பேரை வெளியேற்றுவதற்கான டாஸ்க் வழங்கப்படுகிறது. வரிசையாக போட்டியாளர்களின் உருவங்களை வைத்து, ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்குவது யார் என சொல்லி, அவர்கள் மீது கலர் சாயங்கள் நிரப்பப்பட்ட பந்துகளை வீச வேண்டும்.

உன்னால் தான் பிரச்சனையே

உன்னால் தான் பிரச்சனையே

இதில் ராஜு, சஞ்சீவ் ஆகியோர் பிரியங்கா மீதும், பிரியங்கா, சிபி ஆகியோர் ராஜு மீதும் பந்தை வீசுகிறார்கள். இதனால் பிரியங்கா, சிபி இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. பிரியங்காவும், பிரச்சனை உருவாகுறதே உன்னால் தான் என ராஜுவை சொல்கிறார்.

வார்த்தையை விடாதே அமீர்

வார்த்தையை விடாதே அமீர்

இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இரண்டாவது ப்ரோமோவில் பிரியங்கா, பாவனி மீதான அன்பை ஒரு ஆயுதமாக இந்த கேமிற்காக பயன்படுவதாக கூறி அமீரின் ஃபோட்டோ மீது பந்தை வீசுகிறார். ஆனால் அமீர், அதுவேறு, கேம் வேறு. நீ என் மீது காட்டும் அன்பு தான் போலியாக தெரிகிறது என்கிறார். இதனால் கோபமடையும் பிரியங்கா, அனாவசியமாக வார்த்தையை விடாதே அமீர் என்கிறார். இவர்களின் சண்டையை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் பாவனி.

கொளுத்தி போட்ட பிக்பாஸ்

கொளுத்தி போட்ட பிக்பாஸ்

நேற்றைய முட்டை டாஸ்கின் போது, பிரியங்கா மற்றும் அமீர் சேர்ந்து விளையாடினார்கள். தாமரை தன்னுடைய முட்டையை உடைக்க வரும் போது கூட பிரியங்கா, அமீர் முட்டையை காப்பாற்று என்று அவரை தான் உதவிக்கு கூப்பிட்டார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், நல்லா கொளுத்தி போடுகிறீர்கள் பிக்பாஸ்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 29th December 2021 - Promo 2 | சூடு பிடிக்கும் TICKET TO FINALE
வேற டாஸ்க் கொடுங்க பாஸ்

வேற டாஸ்க் கொடுங்க பாஸ்

வெறித்தனம். அமீர் சரியாக உண்மையை சொல்லி விட்டாரே. நேற்று பாவனி, ராஜுவுடன் நன்றாக விளையாடினார். பிக்பாஸ் ஃபிசிக்கல் டாஸ்க்கை நிரூபிக்கும்படி தனி நபர் டாஸ்க் ஏதாச்சும் கொடுங்க. அதை விட்டு சின்ன பிள்ளை தனமான முட்டை உடைக்கிற டாஸ்க் எல்லாம் கொடுக்காதீங்க என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X