இது செம ட்விஸ்டா இருக்கே...கொளுத்திப் போட்டு, கூண்டோடு தூக்க முடிவு செய்யும் பிக்பாஸ்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்துள்ளது.
18 போட்டியாளர்கள், 2 வைல்ட் கார்டு என்ட்ரியில் இதுவரை 9 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் அடுத்து வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அனைவரும் நாமினேஷன்
நிகழ்ச்சியின் 71 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்படுகிறது. நாமினேட் செய்பவர்களின் பெயர்களை எழுதி பவுலில் போடும்படி பிக்பாஸ் போடுகிறார். பிறகு நான் உங்கள் அனைவரையும் நாமினேட் செய்கிறேன் என பிக்பாஸ் அறிவித்து ட்விஸ்ட் கொடுக்கிறார்.

கூண்டோடு தூக்க போறாரா
பிறகு ஃபினாலே ரேஸ் துவங்கி விட்டது. இதற்கான போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் சிலர் மட்டும் காப்பாற்றப்படுவார்கள் என பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து விட்டது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே நிகழ்ச்சி நடக்கும் என்பதால் இந்த வாரம் கூண்டோடு பலரை வெளியேற்ற பிக்பாஸ் முடிவு செய்திருக்கிறாரோ என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

வரிசைப்படுத்தும் போட்டியாளர்கள்
இந்நிலையில் அடுத்த இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முதல் ப்ரோமோவில் ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ், இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான சண்டைக்கு கொளுத்தி போட்டுள்ளார். இதில் ஃபினாலே ரேஸிற்காக உங்களை தகுதிப்படுத்தி வரிசைப்படுத்த வேண்டும் என்கிறார் பிக்பாஸ். வரிசையாக படிக்கட்டுகள் போன்று அமைக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டியாளர்கள் தங்களின் தகுதி அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும்.

சிபி - நிரூப் சண்டை
இதில் ராஜு மற்ற போட்டியாளர்களை சமாதானப்படுத்த முயல்கிறார். பிரியங்கா இரண்டாவது இடத்திற்கு தன்னை தகுதிப்படுத்தி, அந்த இடத்தில் நிற்கிறார். முதல் இடத்தில் சிபி நிற்கிறார். ஆனால் நீ கேம் விளையாடவில்லை என்று கமல் சார் சொன்னார். முதல் இடத்தில் நிற்க உனக்கு தகுதியே இல்லை என சிபியிடம் கத்துகிறார் நிரூப்.

உனக்கு தான் தகுதியில்லை
ஆனால் தனக்கு தகுதி இருக்கு. உன்னை விட இறுதிப் போட்டிக்கு போக எனக்கு தெம்பு, தைரியம், துணிச்சல் இருக்கு என்கிறார். உனக்கு தாண்டா அது கிடையாது என்கிறார் சிபி. இதை பார்த்து விட்டு ரசிகர்கள், இது இந்த வாரத்திற்கான சண்டையின் ஆரம்பமா என கேட்டுள்ளனர்.

இனி தான் கேமே இருக்கு
இனிமே தான் உண்மையான பிக்பாஸ் கேம் ஆரம்பிக்க போகுது. அதனால் அனைவரும் சரியான நபர்களுக்கு ஓட்டு போடுங்கள். முதல் இடத்திற்கு வருவதற்கு நிரூப்பிற்கு தகுதியில்லை. அண்ணாச்சியை ரொம்ப மிஸ் பண்ணுறோம். பிரியங்கா செம மொக்க போடுறாங்க. நிரூப்பை பார்க்கும் போது கடந்த சீசனின் பாலாஜியை நினைவுபடுத்துது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











