வணங்கான் படத்திலும் ரோலக்ஸை பார்க்கலாம் போலயே.. அட அப்படியே அதே கெட்டப்புல இருக்காரு!
சென்னை: சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன்மட்டுமின்றி ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான கெட்டப்புகளில் சிறு சிறு தோற்ற அமைப்புகளை மாற்றி நடித்து வருகிறார் நடிகர் சூர்யா.
Recommended Video
அதே போல இயக்குநர் பாலா படத்தில் ரொம்பவே முரட்டுத் தனமான தோற்றத்தில் யாருக்கும் வணங்கானாக நடித்து வருகிறார் சூர்யா.
ஆனால், அதே லுக்குடன் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை வைத்த நிலையில், ரோலக்ஸாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

பாலா இயக்கத்தில்
இயக்குநர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடித்த சூர்யா, அப்போது தான் நடிப்பை கற்றுக் கொண்டேன் என மேடைகளில் பேசியிருந்தார். அதன் பின்னர், விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் சூர்யா பண்ண காமெடி காட்சிகள் மற்றும அவரது நடிப்பு இதுவரை அவர் எந்த படத்திலும் பண்ணாத அளவுக்கு தனித் தன்மையுடன் இருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

வணங்கான்
அதன் பிறகு அவன் இவன் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு எல்லாம் முன்னமே அப்பவே கேமியோ செய்து அசத்தி இருப்பார் நடிகர் சூர்யா. இந்நிலையில், மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா, க்ரித்தி ஷெட்டி நடித்து வரும் படத்திற்கு வணங்கான் என டைட்டில் வைக்கப்பட்டு அதன் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே இன்பதிர்ச்சி ஏற்பட்டுள்ளது தான் தற்போதைய டிரெண்டிங் டாப்பிக்காக சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.

ரோலக்ஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி திரையில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது. அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா வெறித்தனம் காட்டி இருப்பார். இந்நிலையில், வணங்கான் படத்திலும் அதே கெட்டப்பில் சூர்யா இருப்பதை பார்த்து ரசிகர்கள் கூஸ்பம்பஸ் அடைந்துள்ளனர்.

ஒரே கெட்டப்பா
விக்ரம் படத்தின் ரோலக்ஸ் மற்றும் வணங்கான் படத்தின் சூர்யா கெட்டப் இரண்டுமே ஒன்று தானா? என்றும் வணங்கான் படம் இதே லுக்கில் வெளியானாலே ஹிட் ஆகிவிடுமே என்றும் சூர்யா ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர். ஆனால், அதே நேரம் விக்ரம் 3ம் பாகத்திலும் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இதே தோற்றத்தில் வந்தால், படம் ஒர்க்கவுட் ஆகுமா? லுக் மாற்றினால் சரியாக இருக்குமா? உள்ளிட்ட கேள்விகளும் கிளம்பி உள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில்
பாலா படத்தை முடித்து விட்டு சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் பேனரில் பிரம்மாண்டமான ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. விவேகம் படத்தை போலவே வெளிநாடு சூட்டிங்கிற்கெல்லாம் சிறுத்தை சிவா பிளான் போட்டு இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











