நிறைய பேச வேண்டி இருக்கு...கமலிடம் குறும்படம் கேட்கும் ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்காவது வாரத்தின் இறுதிப் பகுதியை எட்டி உள்ளது. கமல் வரும் வார இறுதி எபிசோடின் முதல் எபிசோடான இன்று, கமல் என்ன பேச போகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
இரண்டாவது வாரத்தில் நாடியா சாங்கும், மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜாவும் எலிமினேட் ஆகி வெளியே சென்றுள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

கமல் என்ன பேச போகிறார்
இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், நான்காவது வாரத்தில் தாமரை உடை மாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் பாவனியின் உதவியுடன், சுருதி காயினை திருடிச் சென்றது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. அது பற்றி கமல் பேசுவாரா, என்ன பேச போகிறாரா, யார் பக்கம் நியாயம் உள்ளது என்ன சொல்ல போகிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான் அனைவரிடமும் அதிகமாக உள்ளது.

தாமதமாக வந்த ப்ரோமோ
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 27 வது நாளான இன்றைய கமல் வரும் எபிசோடிற்கான ப்ரோமோவை தாமதமாக வெளியிட்டுள்ளது விஜய் டிவி. ஏற்கனவே ப்ரோமோக்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவே தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிறைய பேச வேண்டியிருக்கு
இன்றைய ப்ரோமோவில் கமல், இது விதியா, விதியில இருக்கா, விதி விலக்கா, விதி மீறலா, இது என் தலைவிதியான்னு கூட விவாதிச்சிருக்காங்க. இன்னும் சிலர், சனிக்கிழமை வரட்டும் நான் அவரிடமே பேசிக்கிறேன். அப்படின்னு சொல்லீருங்காங்க. நமக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கு. இன்னிக்கு ராத்திரி என பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

குறும்படம் இருக்கா சார்
இந்த ப்ரோமோவை பார்த்து விட்ட பிக்பாஸ் ரசிகர்கள் பலரும், அதெல்லாம் சரி. குறும்படம் இருக்கா சார். சிபி, ராஜு பாயிண்ட்டாக பேசுறாங்க. கமல் சார், அப்படியே போட்டியாளர்கள் கிட்ட, இப்போ ரெண்டு ப்ரோமோ போடுறதுக்கே மூச்சு முட்டுது. இதுல மூன்றாவது ப்ரோமோக்கு நாங்க எங்க போறது. அந்த அளவுக்கு நீங்க பின்னுறீங்கன்னு சொல்லுங்க என கமெண்ட் செய்துள்ளனர்.

யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்
கமல் சார், அந்த காயின் பிரச்சனையில தாமரைக்கு சப்போர்ட் பண்ணுவாரா இல்ல சுருதிக்கு சப்போர்ட் பண்ணுவாரா. எனக்கு தெரிஞ்சு தாமரைக்கு. அதே போல் இதற்கு உதவியதற்காக பாவனிக்கும் குறும்படம் போடனும்னு விரும்புறோம் என கேட்டுள்ளனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











