»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி மற்றும் தர்மபுரியில், தீபாவளிக்குத் திரையிடப்பட்டுள்ள பிதாமகன், திருமலை, ஆஞ்சநேயா ஆகியதிரைப்படங்களில் நடித்துள்ள விக்ரம், சூர்யா, விஜய், அஜீத் ஆகியோருக்கு கட் அவுட் வைப்பது தொடர்பாகரசிகர்களிடையே அடிதடி, மோதல் நடந்தது.

இதனால் தியேட்டர்களில் படம் பார்த்துக் கொண்டிருந்தபொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

திருச்சி கண்டோண்ட்மென்ட் பகுதியில் உள்ள சோனா, மீனா தியேட்டர்களில் திருமலையும், ஆஞ்சநேயாவும்திரையிடப்பட்டுள்ளன.

இதனால் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கட் அவுட்கள்வைத்துள்ளனர்.

இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், கட்டைகள், பாட்டில்களால் சரமாரியாகதாக்கிக் கொண்டனர்.

இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும்அடித்து விரட்டி நிலைமையைச் சமாளித்தனர்.

இதேபோல, புதுவையிலும் விஜய், அஜீத் ரசிகர்களிடையே கட் அவுட், பேனர், தட்டி வைப்பது தொடர்பாகமோதல் ஏற்பட்டது.

இதேபோல, தர்மபுயில், விக்ரம், சூர்யா நடித்த பிதாமகன் திரையிடப்பட்டுள்ள ரத்னா தியேட்டர் வளாகத்திலும்மோதல் ஏற்பட்டது.

யாருக்கு பெரிய கட் அவுட் வைப்பது என்பதில் இரு ரசிகர்களுக்கிடையேயும் மோதல்ஏற்பட்டது. முதலில் இரு தரப்பினரும் சேர்ந்தே கட் அவுட்களையும், பேனர்களையும் கட்டியுள்ளனர்.

ஆனால்திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்து, அடிதடியாக மாறி, அமளியில் முடிந்தது.

இவர்களது மோதலைப் பார்த்து தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பயந்து போய்வெளியேறினர். இதனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil