twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ரீமேக்.. ஷூட்டிங்கில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

    By
    |

    மும்பை: கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஷூட்டிங்கில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தி தயாரிப்பாளர் போனி கபூர்- நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள்.

    ஶ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மரணமடைந்தார்.

    அங்ரேஸி மீடியம்

    அங்ரேஸி மீடியம்

    ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தடக் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து நெட்பிளிக்ஸுக்காக கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். பின்னர் அங்ரேஸி மீடியம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

    ரூஹி அஃப்ஸானா

    ரூஹி அஃப்ஸானா

    அடுத்து குஞ்சன் சக்சேனா என்ற படத்தில் நடித்திருந்தார். இதிலும் அவர் சிறப்பாக நடித்திருப்பதாகக் கூறப்பட்டது. அடுத்து ரூஹி அஃப்ஸானா, தோஸ்தானா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ரூஹி அஃப்ஸானா படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

    குட்லக் ஜெர்ரி

    குட்லக் ஜெர்ரி

    அவர் தற்போது, குட்லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் நயன்தாரா நடித்து வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இதை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்து வருகிறார். சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார். இதில் நயன்தாரா கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்க, பஞ்சாப்பில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    அமைதியான முறையில்

    அமைதியான முறையில்

    பஞ்சாப் மாநிலம் பாஸி பதானா நகரில் சில நாட்களாக ஷூட்டிங் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்த விவசாயிகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகமான விவசாயிகள் திடீரென அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போராடி வருகிறார்கள்

    போராடி வருகிறார்கள்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை இந்தி திரையுலகினர் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

    கலைந்து சென்றனர்

    கலைந்து சென்றனர்

    அவர்களிடம் பேசிய இயக்குனர் சென்குப்தா, விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை ஜான்வி கபூர் அறிக்கை வெளியிடுவார் என்று கூறி சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் 3 மணி நேரம் ஷூட்டிங் தடைபட்டது. பின்னர் தொடங்கியது.

    அங்கீகரிக்கிறேன்

    அங்கீகரிக்கிறேன்

    இதையடுத்து நடிகை ஜான்வி கபூர், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து ஒன்றைப் பதிவிட்டார். அதில், விவசாயம்தான் நம் நாட்டின் இதயம். நமது தேசத்துக்கு உணவளிக்கும் அவர்கள் பங்கை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அவர்கள் ஆதாயமடையும் வகையிலான தீர்மானம் அவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் ஜான்வி.

    English summary
    Janhvi Kapoor's Good Luck Jerry movie shoot was briefly halted by farmers groups in Punjab who sought her opinion on the farmers' protest against the new agriculture laws.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X