»   »  "தாகபூமி"க்கு நியாயம் வேண்டும்.. நெல் மூட்டையோடு விஷாலுக்கு மனு அனுப்பும் விவசாயிகள்

"தாகபூமி"க்கு நியாயம் வேண்டும்.. நெல் மூட்டையோடு விஷாலுக்கு மனு அனுப்பும் விவசாயிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தாகபூமி திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் சங்க செயலாளரான நடிகர் விஷாலிடம் மனு அளிக்கும் விவசாயிகள் கூடவே அரிசி மூட்டைகளையும் சேர்த்து அனுப்பி வருகின்றனராம்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜசேகர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டுதலோடு தாகபூமி என்ற குறும்படம் எடுத்து வெளியிட்டார்.

Farmers sends bundle of rice to vishal

அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடுப்பில் வெளியான கத்தி திரைப்படம், தன்னுடைய தாகபூமி கதை என்று தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தாகபூமி இயக்குநர் அன்பு.ராஜசேகருக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் பல விவசாயிகள் நியாயம் கேட்டு கையெழுத்து இயக்கம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக கள்ளப்பெரம்பூர் கிராமத்து விவசாயிகள் நடிகர் சங்கத்தின் மூலம் நீதி கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு தாகபூமி பற்றிய தகவல்களுடன் ஒரு மனுவும், அதோடு சொந்த வயலில் விளைந்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசி ஒரு மூட்டையும சேர்த்து அனுப்புகிறார்கள்.

English summary
Farmers sends a rice bundle with pettion for Thagabhumi film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil