திருமண மோசடி.. மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கூறிய ஜாய் கிரிஸில்டாவிற்கு குழந்தை பிறந்தது!

சென்னை: சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக புகார் கூறிய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணமான போட்டோவை சில மாதங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். மேலும், தாம் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், ரங்கராஜால் பல முறை கருவுற்று அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாகவும் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். அவர்கள் நடவடிக்கை எடுக்க தாமதமானதால், சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் புகார் அளித்தார்.

Madhampatty Rangaraj Joy Crizildaa Boy

ஜாய் கிரிஸில்டா: இதையடுத்து, முதல் கட்டமாக அவரிடம் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இப்போது புகைப்படங்கள், செல்போன் உரையாடல் அனைத்தையும் கொடுத்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் விளக்கம் அளித்தார். இதையடுத்து, இரண்டாவது கட்டமாக கடந்த வாரம் ஆஜரான ஜாய், இன்னும் விசாரணை முடியவில்லை, விசாரணை தொடர்ந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரண்டு பேரையும் வர சொல்லி இருக்கிறார்கள். அன்று தான் இறுதியாக என்ன நடக்கப் போகிறது என்பது தெரியும். இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள் அப்போது, மாதம்பட்டி ரங்கராஜ் என்னிடம் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை என்னால் இப்பொழுது சொல்ல முடியாது இறுதியாக விசாரணை நடந்து முடிந்த பிறகு, அனைத்தையும் உங்களிடம் சொல்கிறேன் என்றார்.

குழந்தை பிறந்தது: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியான தகவலை ஜாய் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஜாய் கிரிஸில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தான் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X