தந்தை மிஸ்சிங்.. தாத்தா ரஜினியுடன் தீபாவளி கொண்டாடிய பேரன்கள்.. ட்ரெண்டாகும் படங்கள்

சென்னை: நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியின் மகன்கள் இருவரும் முதன் முறையாக தந்தை இல்லாமல் தாத்தாவுடன் தீபாவளி கொண்டாடியுள்ளனர்.

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி பிரிவுக்கு பின் வரும் முதல் தீபாவளி, தாய் மற்றும் தாத்தா-பாட்டியுடன் பேரன்கள் தீபாவளி கொண்டாடினர்.

கடந்த தீபாவளியை விருது வாங்கிய சந்தோஷத்துடன் கொண்டாடிய ரஜினி குடும்பம் இந்த ஆண்டு பிரிந்துள்ளது.

 ஜெயலலிதா நடத்தி வைத்த ஐஸ்வர்யா தனுஷ் திருமணம்

ஜெயலலிதா நடத்தி வைத்த ஐஸ்வர்யா தனுஷ் திருமணம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தாலி எடுத்துக்கொடுக்க மிகப்பிரம்மாண்டமாக நடந்தது திருமணம். அதன் பின்னர் தனுஷ் வாழ்க்கையும் திரும்பியது. மிகப்பெரிய மனிதர் வீட்டு மருமகன் என்பதால் திரைவாழ்க்கையில் தனுஷுக்கு தொட்டதெல்லாம் துலங்கியது. சொந்தமாக படம் எடுக்கும் அளவுக்கு உயர்ந்தார் தனுஷ்.

 போன வருட தீபாவளியை இரட்டிப்பு சந்தோஷத்துடன் கொண்டாடிய ரஜினி குடும்பம்

போன வருட தீபாவளியை இரட்டிப்பு சந்தோஷத்துடன் கொண்டாடிய ரஜினி குடும்பம்

தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆண் குழந்தையில்லா வீட்டில் முதல் ஆண் குழந்தையாக யாத்ரா பிறந்தார், அடுத்து லிங்கா, சௌந்தர்யாவுக்கும் முதல் குழந்தை ஆண் குழந்தை, இந்த ஆண்டு மீண்டும் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால் ரஜினிக்கு பேத்திகள் இல்லை. நான்கு பேரன்கள் தான் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 5 அன்று வந்த கொடிய கொரோனா லாக்டவுனுக்கு பிறகு வந்த தீபாவளி அதற்கு முன் மாமா ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்றிருந்தார், மருமகன் தனுஷ் சிறந்த நடிகர் விருது பெற்றிருந்தார். தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீசாகியிருந்தது. அனைத்து ரஜினி குடும்பத்துக்கு பெரிய சந்தோஷமான தீபாவளியாக அமைந்தது.

 என்ன ஆனதோ முறிந்த 18 ஆண்டு திருமண பந்தம்

என்ன ஆனதோ முறிந்த 18 ஆண்டு திருமண பந்தம்

என்ன ஆனதோ ஏதானதோ 18 ஆண்டு திருமண வாழ்வை முறித்துக்கொண்டனர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி. இருவர் முடிவிலும் தந்தை ரஜினிகாந்த் தலையிடவில்லை. உலகம் அறிந்தவர்கள் முடிவு உங்கள் கையில் ஆனால் பொதுவெளியில் எதுவும் அவதூறாக பேசக்கூடாது. பேரன்கள் வாழ்க்கையும் முக்கியம் என ரஜினிகாந்த் கூறிவிட்டதால் இருவரும் இதுவரை எதுவும் பொதுவெளியில் பேசாமல் மவுனம் காக்கின்றனர். பிள்ளைகள் தேவைப்பட்ட பொழுது அப்பா தனுஷை சென்று பார்க்கிறார்கள்.

 தாத்தாவுடன் தீபாவளி கொண்டாடிய பேரன்கள் யாத்ரா-லிங்கா

தாத்தாவுடன் தீபாவளி கொண்டாடிய பேரன்கள் யாத்ரா-லிங்கா

இந்த ஆண்டு தீபாவளி தனுஷ் திரையுலக வாழ்க்கையில் வெற்றிகரமான ஒன்று. கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அனைத்து படத்திலும் நல்ல வரவேற்பு. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த ஆண்டின் சந்தோஷம் அவருக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு மகன்களுடன் ஒன்றாக அனைவரும் கடந்த ஆண்டு கொண்டாடிய தீபாவளி போல் இந்த ஆண்டு இல்லை. ஆனால் ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்த் தாயார் லதா மற்றும் மகன்களுடன் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். அதில் பேரன்கள் கொண்டாடுவதை தாத்தா ரஜினிகாந்த் சந்தோஷம் பொங்க பார்ப்பது தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X