»   »  பொறுப்பான தந்தையாக செயல்படும் பாலிவுட் நட்சத்திரங்கள்

பொறுப்பான தந்தையாக செயல்படும் பாலிவுட் நட்சத்திரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தங்களது படங்களின் மூலம் கோடிக்கணக் காண இதயங்களை கொள்ளை கொண்டு பாலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் இந்தி நட்சத்திரங்களின் நிஜ மனதைக் கொள்ளை கொள்பவர்கள் யார் என்று தெரியுமா?

நீங்கள் நினைப்பது போல நடிகைகள் இல்லை...அவர்களின் குழந்தைகள் தான் அவர்களின் இதயங்களை கொள்ளையடித்த கள்வர்கள். ஆமாம் ஒவ்வொரு ஸ்டாரும் தங்கள் குழந்தைகளின் மேல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு அன்பு வைத்துள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் நடிப்பிற்கு அப்பாற்பட்டு, நிஜ வாழ்க்கையில் தங்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு கொண்ட தந்தைகளாக விளங்கும் சில பாலிவுட் நட்சத்திரங்களைப் பற்றி பார்க்க்கலாம்.

ஷாரூக் கான்

ஷாரூக் கான்

இந்தி சூப்பர்ஸ்டார் களில் ஒருவரான ஷாரூக் கான் தனது குழந்தைகளான ஆர்யன், சுஹானா மற்றும் ஆப்ராம் என மூன்று குழந்தைகளின் மேலும் பாசத்தைப் பொழிபவர். இதில் வயதில் மிகச் சிறியவரான ஆப்ராம் மீது மிகுந்த அன்பு கொண்ட ஷாரூக், சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆப்ராமின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுகிறார்.

அபிஷேக் பச்சான்

அபிஷேக் பச்சான்

நடிகை ஐஸ்வர்யாவின் அன்புக் கணவரான அபிஷேக் தனது மூன்று வயது மகள் ஆராத்யாவை மிகுந்த பாதுகாப்புடன் பார்த்துக் கொள்கிறார். தனது குழந்தையின் மேல் எவ்வாறு பாசம் வைப்பது மற்றும் குழந்தையிடம் எப்படி அமைதியாக நடந்து கொள்வது போன்ற செயல்களை அவர் தனது தந்தை அமிதாப்பிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளார்.

அக்சய் குமார்

அக்சய் குமார்

அக்சய் தனது குழந்தைகளான ஆரவ் மற்றும் நிதாராவுடன் அதிகமான நேரங்களை செலவழிப்பவர். தற்போது தனது அன்பு மகன் ஆரவ் பெயரை முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

அமீர்கான்

அமீர்கான்

அமீர்கான் தனது முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளான இரா மற்றும் ஜுனைத் உடன் தந்தையாக மிகுந்த நேரங்களை செலவு செய்பவர். தற்பொழுது இரண்டாவது மனைவி மூலம் பிறந்த இளைய மகன் ஆசாத்தின் மீதும் பாசம் அதிகம் வைத்து அவனுடனும் நேரங்களை செலவு செய்து வருகிறார்.

ஹிருத்திக்ரோஷன்

ஹிருத்திக்ரோஷன்

மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் தனது மகன்களான ரிஹான் மற்றும் ரீடான் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார் ஹிருத்திக். குழந்தைகளுடன் நேரம் செலவு செய்ய ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதனைத் தவற விடுவதில்லை ஹிருத்திக்.

ரித்தேஷ் தேஷ்முக்

ரித்தேஷ் தேஷ்முக்

இந்த வருடம் தனது மகன் ரியான் உடன் முதல் தந்தையர் தினத்தைக் கொண்டாடுகிறார் ரித்தேஷ். நட்சித்திர தம்பதிகளான ரித்தேஷ் - ஜெனிலியா குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் எந்த புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றியதில்லை. தற்போது முதன்முறையாக கடந்த மாதம் தங்கள் மகன் ரியானின் சில புகைப்படங்களை ஊடகங்களில் முதல் முறையாக பதிவு செய்துள்ளனர்.

English summary
Today World Father’s day.Bollywood celebrities Shah Rukh Khan, Akshay Kumar, Riteish Deshmukh, Abhishek Bachchan, Aamir khan and Hrithik Roshan, the handsome hunks have ended up becoming the coolest dads for their kids.
Please Wait while comments are loading...