twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர் ஹீரோக்களின் தந்தை ஸ்டான் லீ மரணம்

    |

    Recommended Video

    சூப்பர் ஹீரோக்களின் தந்தை ஸ்டான் லீ மரணம் வீடியோ

    லாஸ் ஏஞ்சல்ஸ்: காமிக்ஸ் ஹீரோக்களின் தந்தை என அழைக்கப்பட்ட ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார்.

    மார்வல் காமிக்ஸ் ஹீரோக்களை உருவாக்கி ஸ்பைடர் மேன், ஹல்க் போன்ற கதாபாத்திரங்களால் ஹாலிவுட் உலகை ஆட்சி செய்தவர் ஸ்டான் லீ.

    உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் 95 வயதில் காலமானார்.

    விஜய்க்கு கிடைத்த அதே பாக்கியம் 'ரீல் தோனி'யின் படத்திற்கும்: அப்போ ஹிட் தான் விஜய்க்கு கிடைத்த அதே பாக்கியம் 'ரீல் தோனி'யின் படத்திற்கும்: அப்போ ஹிட் தான்

    கற்பனைத் திறன்

    கற்பனைத் திறன்

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன்னுடைய கற்பனைத் திறனால் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கட்டிப்போட்டவர் ஸ்டான் லீ. அமெரிக்காவின் மன்ஹாத்தனில் பிறந்த அவருக்கு சிறுவயதிலிருந்தே அசாத்தியமான காதாபாத்திரம் பற்றிய சிந்தனை மேலோங்கியிருந்தது. துணி வெட்டும் தொழில் செய்து வந்த லீ, தான் இருக்க வேண்டிய இடம் இது இல்லை என்பதை உணர்ந்து தூக்கி எறிந்தார்.

    எர்ரால் ஃப்ளன்

    எர்ரால் ஃப்ளன்

    திரைப்படங்கள் பார்ப்பதிலும் புத்தகங்கள் படிப்பதிலும் லீ க்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. ராபீன் ஹுட் ஆக நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் எர்ரால் ஃப்ளன் படங்களை விரும்பி பார்ப்பார். அவரைப் போல படங்களில் சாகசங்கள் செய்யும் கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டுமென்று ஆசை வந்தது. பிறகு அதற்கான பல நாள் உழைத்து பல உலக மகா சூப்பர் ஹீரோக்களை கதாபாத்திரங்களை உருவாக்கினார்.

    ஃபென்டாஸ்டிக் ஃபோர்

    ஃபென்டாஸ்டிக் ஃபோர்

    மார்வல் காமிக்ஸ் தொடங்கி காமிக்ஸ் உலகத்தில் காலடி எடுத்துவைத்த பிறகு 1939 ஆம் ஆண்டு பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தை உருவாக்கினார். அதன்பிறகு ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், தோர், அயர்ன் மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர், ஹல்க், டேர்டெவில், ஆன்ட் மேன் என இன்று ஹாலிவுட் உலகை காப்பாத்திக் கொண்டிருக்கும் சூப்பர் ஹீரோக்கள் இவரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. 1961 ஆம் ஆண்டு இவர் எழுதிய ஃபென்டாஸ்டிக் ஃபோர் காமிக்ஸ் எல்லா கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து வெற்றிக்களை குவிக்க துவக்கப் புள்ளியானது. அதன்பிறகு அவரின் புகழ் உச்சிக்குச் சென்றது. இத்தனை சூப்பர் ஹீரோக்களை திரையிலும் தெருவிலும் உலாவக் காரணமாக இருந்த ஸ்டான் லீ இன்று ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

    சிறப்பு தோற்றம்

    சிறப்பு தோற்றம்

    அவ்வப்போது திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் தலைகாட்டிய லீ, கடைசியாக நடித்தது அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படம் தான். 95 வயதான ஸ்டான் லீ முதுமையின் கோரப்பிடியில் கடந்த ஐந்து வருடங்களாக அவதிப்பட்டு வந்தார். நிமோனியா காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மரணம் தழுவிக்கொண்டுள்ளது. பிரபல காமிக்ஸ் எழுத்தாளர்களான ஜேக் கிர்பி, ஸ்டீவ் டிக்டோ, ஜான் ரோமிதா, டான் ஹெக், பில் எவெரெட், ஜோ மனீலி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The great father of Marvel Super heroes writer, editor, Publisher Stan Lee passes away due to age related ailments at 95.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X