»   »  பிள்ளைகளின் ஹீரோவான ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யாவுக்கு சல்யூட்

பிள்ளைகளின் ஹீரோவான ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யாவுக்கு சல்யூட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தையர் தினமான இன்று பிரபலங்களாக இருந்தும் தங்களின் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கத் தவறாத தந்தைகள் பலர் உள்ளனர்.

ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ அவர்களின் தந்தை தான். கை பிடித்து நடக்கக் கற்றுக் கொடுத்து, வாழ கற்றுக் கொடுத்து குழந்தைகள் வாழ்வில் முன்னேறுவதை பார்த்து மகிழ்ச்சி அடையும் ஜீவன் தந்தை. அத்தகைய தந்தைகளை கௌரவிக்கும் வகையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தந்தையர் தினமான இன்று சில பிரபலமான கோலிவுட் தந்தைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் பார்ப்போம்,

ரஜினி

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரண்டு மகள்கள் திருமணமாகி செட்டில் ஆனாலும் அவர்கள் தங்கள் சொந்த காலில் நின்று தங்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் ஐஸ்வர்யாவையும், சௌந்தர்யாவையும் வளர்த்துள்ளார்.

கமல்

கமல்

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் உலக நாயகன் கலம் ஹாஸன் தனது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷராவுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்துள்ளார். அவர்கள் இருவரும் பெற்றோரை போன்று திரை துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

அர்ஜுன்

அர்ஜுன்

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தந்தை வழியில் நடிக்க வந்தார். அவர் நடித்த முதல் படம் ஓடவில்லை. இருப்பினும் மகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு படத்தை எடுத்து வருகிறார் அர்ஜுன்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது இரண்டாவது மகன் சண்முக பாண்டியனை ஹீரோவாக்கிவிட்டார். சண்முக பாண்டி ஹீரோவாக அறிமுகமான படம் புஸ்ஸானது. இருப்பினும் ஒரு நல்ல தந்தையாக விஜயகாந்த் தனது மகனுக்கு ஆறுதல் கூறி அவருக்கு ஏற்ற கதையை தயார் செய்யுமாறு முன்னணி இயக்குனர்களிடம் கேட்டுள்ளார்.

அஜீத்

அஜீத்

அஜீத் என்ன தான் படங்களில் நடித்தாலும் தனது மகள் அனௌஷ்காவுடன் நேரம் செலவிடத் தவறுவது இல்லை. மகளின் பள்ளி விழாக்களை கூட அஜீத் மிஸ் பண்ணுவது இல்லை. அவருக்கு அண்மையில் ஆத்விக் என்ற மகன் பிறந்துள்ளார்.

விஜய்

விஜய்

இளைய தளபதி விஜய் படம், விளம்பர படங்கள் என பிசியாக இருந்தாலும் தனது மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யாவுடன் முடிந்த வரை நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆண்டுதோறும் அவர்களை அழைத்துக் கொண்டு லண்டன் சென்று சில நாட்கள் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சூர்யா

சூர்யா

சூர்யா ஜோதிகாவிடம் தனது குழந்தைகள் தியா மற்றும் தேவை விட்டுச் சென்றாலும் அவர்களுக்கு என நேரத்தை ஒதுக்கத் தவறுவது இல்லை.

விக்ரம்

விக்ரம்

சீயான் விக்ரமுக்கு அக்ஷிதா, த்ருவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். த்ருவ் தன்னைப் போன்று நடிக்க வந்தால் அதை தடுக்க மாட்டேன் என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

பார்க்க சுள்ளான் போன்று இருக்கும் தனுஷ் யாத்ரா, லிங்கா என்று 2 மகன்களின் தந்தை ஆவார். தனது மகன்கள் தன்னைப் போன்று இல்லாமல் தெளிவாக இருப்பதாகக் கூறி பெருமைபட்டுள்ளார் தனுஷ்.

இவர்கள் மட்டும்தானா?

இவர்கள் மட்டும்தானா?

ரஜனி, கமல், அஜீத், விஜய், சூர்யா உள்ளிட்ட ஹீரோக்கள் மட்டும் தான் நல்ல அப்பாக்களா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில். கோலிவுட்டில் உள்ள பலர் நல்ல அப்பாக்களாக உள்ளனர். ஆனால் அனைவரையும் பட்டியலிட முடியாததால் குழந்தைகளுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள அவர்களுக்கு எல்லாம் ஒரு ராயல் சல்யூட் வைப்போம்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

பிரபலங்கள் மட்டும் அல்ல பாமர தந்தைகளும் குழந்தைகளுக்காக தங்களின் கனவை அழித்துக் கொண்டு, ஆசைகளை அடக்கி குழந்தைகளின் கனவை நிறைவேற்றி மகிழ்விக்க தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய தந்தைகள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

English summary
World people are celebrating fathers day today to honour those men who dedicate their lives for the wlefare of their children. Above is the list of few Kollywood heroes who are dedicated dads.
Please Wait while comments are loading...