Don't Miss!
- News
அடிதூள்.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் புதுச்சேரியில் தொடக்கம்! மக்கள் ஹேப்பி
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
தமிழ்நாட்டிலும் வாரிசு தான் நம்பர் ஒன் வசூல்.. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஓபன் டாக்!
சென்னை: விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு படங்களும் இந்த பொங்கலுக்கு நேரடி மோதலில் ஈடுபட்டன. ஒரு படம் ஒரு நாள் முன்னதாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், துணிவு திரைப்படம் ஒரு ஷோ முன்னாடி வெளியானது. அதற்கும் செக் வைக்கும் விதமாக பத்திரிகையாளர்கள் காட்சியை முதல் நாள் இரவே வாரிசு படக்குழு போட்டு போட்டா போட்டி போட்டது.
வசூலிலும் இரு படங்களும் தமிழ்நாடு அளவில் செம டஃப் ஆன போட்டி போட்டு வருகின்றன. முதல் நாள் தமிழ்நாட்டில் வாரிசு படத்தின் வசூலை துணிவு படம் முந்தியதாக கூறப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் தமிழ்நாட்டிலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளி வாரிசு படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆட்டநாயகன் விஜய்.. 7 நாட்களில் 210 கோடி ரூபாய்.. வாரிசு அதிகாரப்பூர்வ வசூல்.. ரசிகர்கள் செம ஹாப்பி!

அசால்ட்டா 210 கோடி
நடிகர் விஜய்யின் ஃபேன் பேஸ் உலகளவில் மிகப்பெரிய ரேஞ்சில் இருப்பதை இந்த வாரிசு படம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜு பெயரில் மட்டும் தில் இல்லை நிஜத்திலும் நான் தில்லான ஆளுதான்ப்பா என வாரிசு படத்தின் 7 நாள் வசூல் 210 கோடி ரூபாயை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

போனி கபூர் அமைதி
அதே நேரம் துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூர் படம் நல்ல வசூலை குவித்து வருகிறது என தொடர்ந்து ட்வீட் போட்டு வரும் நிலையில், அதிகாரப்பூர்வ கலெக்ஷன் பற்றி மட்டும் இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படம் வசூலை வாரிக் குவித்து வருவது மட்டுமின்றி இந்த முறை ஓவர்சீஸிலும் நடிகர் அஜித்துக்கான பெரிய மார்க்கெட் ஓபன் ஆகி உள்ளதாக கூறுகின்றனர்.

ரவீந்தர் சந்திரசேகரன் பளிச்
இந்நிலையில், பிரபல் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஃபேட்மேன் ரவீந்தர் சந்திரசேகரன் தமிழ்நாட்டிலும் வாரிசு திரைப்படம் தான் வசூலில் முந்தியுள்ளது. இந்த கண்டம் இல்லை எந்த கண்டம் ஆனாலும் விஜய்யின் வாரிசு படம் தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. துணிவு படம் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது எனக் கூறியுள்ளார்.

துணிவு கதை சூப்பர்
வணிக ரீதியாக வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதே நேரம் அஜித்தின் துணிவு திரைப்படம் கதை மற்றும் கன்டென்ட் ரீதியாக ரொம்பவே நல்லா இருக்கு, ரசிகர்கள் பலரும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.

வம்சி சொதப்பிட்டாரு
தளபதி விஜய் போன்ற ஒரு பெரிய ஆளுமைக்கு இன்னும் சூப்பரா படத்தை கொடுத்திருக்கலாம். வாரிசு படத்தின் மீதான விமர்சனங்களுக்கு முழு பொறுப்பு வம்சி ஒருவர் மட்டும் தான் என்று தான் நான் சொல்வேன். துணிவு படம் அளவுக்கு விஜய்யும் இந்த முறை பக்கா ஆக்ஷன் படத்துடன் வந்திருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.