»   »  இந்த வாரம் சிறு பட்ஜெட் படங்களின் வாரமா?

இந்த வாரம் சிறு பட்ஜெட் படங்களின் வாரமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜில் ஜங் ஜக், அஞ்சல, வில் அம்பு, இரண்டு மனம் வேண்டும் என்று 4 சிறு பட்ஜெட் படங்கள் இன்று வெளியாகி இருக்கின்றன.

இதில் சித்தார்த் நடிப்பில் ஜில் ஜங் ஜக், விமல் நடிப்பில் அஞ்சல, ஸ்ரீ நடிப்பில் வில் அம்பு மற்றும் புதுமுகங்கள் சஜி சுரேந்திரன், சிலங்கா ஆகியோரின் நடிப்பில் இரண்டு மனம் வேண்டும் படங்கள் உருவாகி இருக்கின்றன.


ஜெயம் ரவியின் மிருதன் தள்ளிப்போன நிலையில் வேறு பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இன்று வெளியாகவில்லை.


ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

சித்தார்த், அவினாஷ் ரகுதேவன், சனத் ரெட்டி, நாசர், ராதாரவி மற்றும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜில் ஜங் ஜக். வடிவேலு வசனத்தை தலைப்பாக வைத்தது, படத்தில் ஹீரோயினே இல்லாதது எல்லாம் சேர்ந்து ரசிகர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கற்பனை கலந்து தீரஜ் வைத்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை படம் காப்பாற்றுமா? பார்க்கலாம்.


அஞ்சல

அஞ்சல

விமல், நந்திதா, பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அஞ்சல. ஒரு டீக்கடையை சுற்றி நகரும் விதமாக படத்தின் கதையை இயக்குநர் தங்கம் சரவணன் அமைத்திருக்கிறார்.படத்தில் இடம்பெறும் டீக்கடை பாடலில் ஜீவா, தம்பி ராமையா, சூரி, பாபி சிம்ஹா,விஜய் சேதுபதி, சசிகுமார் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துக் கொடுத்திருக்கின்றனர். கோபி சுந்தர் இசையில் உருவான பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் படமும் வரவேற்பைப் பெறுமா?


வில் அம்பு

வில் அம்பு

ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வில் அம்பு. ரமேஷ் கல்யாண் இயகியிருகும் இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் வழங்குவது ரசிகர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது.


இரண்டு மனம் வேண்டும்

இரண்டு மனம் வேண்டும்

புதுமுகங்கள் சஜி சுரேந்திரன், சிலங்கா நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை பிரதீப் சுந்தர் இயக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே புதுமுகங்கள் என்பதால் இப்படம் ரசிகர்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு பெரும் என்பது தெரியவில்லை.


மொத்தத்தில் இன்று வெளியாகி இருக்கும் 4 படங்களுமே சிறு பட்ஜெட் படங்கள் என்பதால், எந்தப் படம் வசூலில் சாதனை படைக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.English summary
Today Released Movies List -Jil Jung Juk, Anjala, Vil Ambu and Irandu Manam Vendum. Which Movie Get Huge Response? Wait and See!
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil