»   »  தெறிக்கும் கண்கள்.. கொப்பளிக்கும் குரோதம்.. கூடவே கொஞ்சம் காமம்.. பயமுறுத்தும் தெலுங்குப் பேய்

தெறிக்கும் கண்கள்.. கொப்பளிக்கும் குரோதம்.. கூடவே கொஞ்சம் காமம்.. பயமுறுத்தும் தெலுங்குப் பேய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் மட்டும்தான் பேய்கள் தலைவிரித்தாடுவதாக நினைப்போரே.. ஒரு திருத்தம்.. இப்போது ஆந்திராவையும் பேய்கள் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளன. தர லோக்கல் ரேஞ்சுக்கு அங்கு ஒரு பேய்ப்படம் ரெடியாகி வருகிறது. பாகுபலி அலை ஓய்ந்ததும் இந்தப் பேய் தியேட்டர்களை துவம்சம் செய்யக் காத்திருக்கிறதாம்.

தமிழ் சினிமாவை பேய்கள் ஆட்டிப்படைத்து வரும் காலம் இது. எல்லாப் பேரும் பேயாக மாறி விட்டார்களோ என்று சந்தேகப்படும் அளவுக்கு பேய்ப் படமாக எடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல வேளையாக இந்த பேய்களிடமிருந்து பாபநாசமும், பாகுபலியும் மக்களை சற்று காப்பாற்றி மீட்டன. இருந்தாலும் இந்த இரண்டு படங்களும் அடங்கிய பின்னர் மீண்டும் பேயாட்டம் போடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் ஆந்திர ரசிகர்களைக் கலக்க ரெடியாகி வருகிறது ஒரு பேய்ப்படம்.

பிப்ரவரி 14 பிரீத் ஹவுஸ்

பிப்ரவரி 14 பிரீத் ஹவுஸ்

படத்தின் பெயரிலேயே பாதிக் கதை புரிந்து விடும் நமக்கு. பிப்ரவரி 14 பிரீத் ஹவுஸ் என்பதுதான் படத்தின் பெயர். காதலர் தினத்தன்று நடைபெறும் ஒரு கொலைதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

தர லோக்கல் பேய்

தர லோக்கல் பேய்

படத்தின் கதையைப் பார்த்தால் இது ஒரு தர லோக்கல் பேய் பற்றிய கதை போலத் தெரிகிறது. பேய்ப் படங்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய இத்யாதி இத்யாதிகள் நிறையவே இதிலும் இருக்கிறது.

காதலும் காமமும்

காதலும் காமமும்

ஒரு காதல், அதில் மிதமிஞ்சி நிற்கும் காமம், தனி்மையான சூழல், பாழடைந்த பங்களா, ஆளே இல்லாமல் ஆடும் சேர்கள், ஒரு மர்மக் குழந்தை, கூடவே கையில் பொம்மை, பலமாக வீசும் காற்று, காற்றில் ஆடும் கத்தி.. இப்படி நிறையவே இதில் இருக்கிறது பயமுறுத்துவதற்கு.

தாடி வைத்த தாத்தா

தாடி வைத்த தாத்தா

கூடே தாடி வைத்த தாத்தா, அவரது இன்வெஸ்டிகேஷன் மூளை, இரண்டு பெண்கள், மர்மமான சத்தம், கதறல், திடீர் திடீர் பேக்கிரவுண்ட் மர்மம் என பார்முலா மாறாத பேய்ப் படமாக இருக்கிறது இந்த பிப்ரவரி 14.

பேபி பிரேமாவும், ஸ்மைலியும்

பேபி பிரேமாவும், ஸ்மைலியும்

பேபி பிரேமா, பார்த்து, சுரேஷ், ஸ்மைலி ஆகியோர் நடிக்க, ப்ரவீன் ரெட்டி இசையமக்க, சத்ய ராவ் சினிமா இப்படத்தைத் தயாரித்துள்ளது.

தமிழுக்கும் வருமோ

இந்தப் பேய்ப் படத்தை எல்லா மொழிகளிலும் தைரியமாக டப் செய்து வெளியிடலாம். எனவே தமிழுக்கும் இது டப்பாகி வரலாம் என்றும் அஞ்சப்படுகிறது!

English summary
February 14 breath house is a formula ghost movie made in Telugu and to be released soon.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil