»   »  இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்... ரேஸில் எந்தப் படம் ஜெயிக்கும்?

இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்... ரேஸில் எந்தப் படம் ஜெயிக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்த வாரம் வந்த படங்களில் எந்த படம் மலையேறும் எந்த படம் மண்ணை கவ்வும்,,?

சென்னை : தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்கள் வெளியாவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பிப்ரவரி 23-ம் தேதியும் பல படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அனைத்துப் படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள்தான்.

பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நாளை 8 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன, இன்று ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆக, இந்த வாரக் கணக்கில் 9 படங்கள்.

பிப்ரவரி ரிலீஸ்

பிப்ரவரி ரிலீஸ்

முடியப்போகும் பிப்ரவரி மாதத்தில் இதுவரை கடந்து போன மூன்று வெள்ளிக்கிழமைகளில் வெளிவந்த 14 படங்களில் ஒரு தமிழ்ப் படம் கூட தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாகப் போகவில்லை. அதிலும் பல படங்கள் வெளியான முதல் நாளிலேயே பல தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே அரங்குகள் நிரம்பின.

9 படங்கள்

9 படங்கள்

பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 23ம் தேதி '6 அத்தியாயம்', 'கேணி', 'காத்தாடி', 'அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்', 'ஏண்டா தலையில எண்ண வெக்கல' உள்ளிட்ட படங்கள் வெளிவர இருக்கின்றன. பெரிய படங்களுடன் போட்டி இல்லாமல் வெளியாகும் இந்தப் படங்களாவது நல்ல படங்களாக அமையுமா?

கேணி

கேணி

தமிழகத்தின் தலையாய பிரச்னையாக இருக்கும் தண்ணீர் பிரச்னையைப் பற்றி பேசும் படம் 'கேணி'. இதில் பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். பிரபல நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் முகம் காட்டுகிறார். தமிழ், மலையாளத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார்.

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்

அனுஷ்கா, நாகார்ஜுனா, ஜெகபதிபாபு, பிரயக்யா ஜெய்ஸ்வால் ஆகியோர் நடித்துள்ள படம் 'அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்'. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் குரு ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார். இந்த பக்திப் படத்தில் ஆண்டாள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா.

6 அத்தியாயம்

6 அத்தியாயம்

அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குநர்கள் இயக்கி, எல்லாவற்றின் முடிவும் ஒவ்வொரு கதையின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் கிளைமாக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. இப்படத்தில் தமன், விஷ்ணு, 'பசங்க' கிஷோர், சஞ்சய், வினோத், பேபி சாதன்யா, ஆகியோர் நடித்துள்ளனர்.

மெர்லின்

மெர்லின்

'பச்சை என்கிற காத்து' படத்தை தந்த இயக்குநர் கீராவின் அடுத்த படம் இது. சினிமாவில் வாய்ப்பு தேடும் ஒரு இளைஞனை பற்றிய இந்தக் கதை அமானுஷ்ய பின்னணியில் சைக்கோ த்ரில்லராக, கிளாமர், காமெடி கலந்து சொல்லப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷ்ணுப்ரியன், புதுமுகம் அஸ்வினி ஜோடியாக நடித்திருக்கின்றனர்.

கூட்டாளி

கூட்டாளி

'அழகி' படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்த சதீஷ், அப்புக்குட்டி, அருள்தாஸ் ஆகியோர் நடித்த 'கூட்டாளி' திரைப்படம் ஒரு நாள் முன்னதாக இன்றே ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தை எஸ்.கே.மதி இயக்கியுள்ளார்.

சிறிய பட்ஜெட் படங்கள்

சிறிய பட்ஜெட் படங்கள்

இவை தவிர புதுமுகங்கள் நடித்திருக்கும் 'காத்தாடி', ஏண்டா தலையில எண்ண வெக்கல', 'பேய் இருக்கா இல்லையா' மற்றும் தெலுங்கிலிருந்து டப் ஆகியிருக்கும் 'போக்கிரிப் பையன்' ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இந்தப் போட்டியில் எந்தப் படம் தேறப்போகிறதோ?

English summary
Every Friday, there are many films releasing on tamil cinema. In this week , lot of small budget films will be released including 'Keni', 'Koottali' and kaathadi'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil