»   »  அதர்வா, அருள்நிதியுடன் மோதும் எஸ்.ஏ.சந்திரசேகர்... மோதலில் வெல்வாரா?

அதர்வா, அருள்நிதியுடன் மோதும் எஸ்.ஏ.சந்திரசேகர்... மோதலில் வெல்வாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வழக்கம்போல அதர்வாவின் கணிதன், அருள்நிதியின் ஆறாது சினம் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் நையப்புடை என்று 3 படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஆறாது சினம் திரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப்பின் மெமரிஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கிறது. அதர்வாவின் நடிப்பில் டி.என்.சந்தோஷ் இயக்கத்தில் கணிதன் உருவாகியுள்ளது.


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் இணைந்து நடித்திருக்கும் நையப்புடை படத்தை அறிமுக இயக்குநர் விஜய் விக்ரம் இயக்கியிருக்கிறார்.


இளம் நாயகர்களுடன் போட்டியிடும் சந்திரசேகர் மோதலில் வெல்வாரா? என்பதை பார்க்கலாம்.


கணிதன்

கணிதன்

கடந்த வருடத்தில் வெளியான ஈட்டி வெற்றிப்படமாக மாறியதில் அதர்வாவின் படங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை மனதில் கொண்டு தயாரிப்பாளர் தாணு 450க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளார். அதர்வா, கேத்தரின் தெரசா, மனோபாலா, பாக்யராஜ், ஆடுகளம் நரேன், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருக்கிறார். ஈட்டி படத்தால் கணிதனிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆறாது சினம்

ஆறாது சினம்

ஆறாது சினம் திரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப்பின் மெமரிஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கிறது. ஈரம், வல்லினம் போன்ற தரமான படங்களைத் தந்த இயக்குநர் அறிவழகனின் படமென்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. டிமாண்டி காலனி படத்தின் வெற்றியை ஆறாது சினம் மூலம் அருள்நிதி தக்க வைத்துக் கொள்வாரா? இன்னும் சற்று நேரத்தில் இதற்கான விடை தெரிந்து விடும்


நையப்புடை

நையப்புடை

70 வயதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் இந்த நையப்புடை. சந்திரசேகருடன் இணைந்து பா.விஜய், சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் விஜி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 'திமிரு பிடிச்ச தமிழன்டா' என்று வசனம் பேசியிருக்கும் சந்திரசேகர் நையப்புடை நாயகனாக வெல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


கணிதன், நையப்புடை

கணிதன், நையப்புடை

இன்று வெளியாகியிருக்கும் கணிதன் மற்றும் நையப்புடை ஆகிய 2 படங்களையும் கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். மேலும் விஜய்யின் தெறி படத்தையும் தாணுவே தயாரித்து வருகிறார். இதனால் ஒரே நேரத்தில் அப்பா சந்திரசேகர், மகன் விஜய் படங்களை தயாரித்தவர் என்கிற பெருமை தாணுவிற்கு கிடைத்துள்ளது.


இளம் நாயகர்களுடன் போட்டியிடும் சந்திரசேகர் அதில் வெற்றி பெறுவாரா? பார்க்கலாம்.English summary
February 26 Released Movies List - Kanithan, Aarathu Sinam, Naiyyapudai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil