twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்பள உயர்வு கேட்டு போராட்டம் - பெப்சி அறிவி்ப்பு

    By Shankar
    |

    இனி பெப்சி அமைப்புக்கும் எங்களுக்கும் ஒப்பந்தம் எதுவும் கிடையாது, இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொள்வோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விட்டதால், தயாரிப்பாளர்களுக்கு எதிராக போராட்டம் தொடரும் என பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது.

    23 சினிமா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பெப்சி. சம்பள உயர்வு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம் என்று அதிரடி தீர்மானம் நிறைவேற்றினர். இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க பெப்சி தொழிலாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது.

    சங்கத்தின் தலைவர் ராமதுரை, செயலாளர் சிவா, பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

    தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பாரம்பரியம் மிக்க பெப்சியை பற்றி தவறான செய்தி பரப்பியதை தயாரிப்பாளர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். 4 ஆண்டுகளை கடந்து 5 ஆண்டுகள் ஆன பின்பும் சம்பளத்தை உயர்த்தி தராமல் இழுத்தடிப்பது தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும்.

    பெப்சியுடன் தயாரிப்பாளர் சங்கம் ஊதிய உயர்வு சம்பளத்தை ஏற்படுத்தவில்லை என்றால் 23 சங்கங்களும் இணைந்து ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம். இதே கால கட்டத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தவும் பெப்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.

    English summary
    Film employees federation FEFSI announced that the federation would fight to get a wage revision from producers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X