»   »  படப்பிடிப்புகள் இன்று ரத்து.. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்

படப்பிடிப்புகள் இன்று ரத்து.. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெப்சி தலைவர் ஜி.சிவா மீது ஒளிப்பவதிவாளர் சங்கத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, படப்பிடிப்புகள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (SICA) தேர்தல், 10 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புதிய தலைவராக பொறுப்பேற்றார். சங்கத் தலைவர் பிசி ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள், பெப்சி சிவா உள்ளிட்ட சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர். அந்தப் புகார் மனுவில், '2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்கவில்லை' என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

FEFSI calls off strike on tomorrow

இந்நிலையில் பெப்சி தலைவர் ஜி.சிவா மீது ஒளிப்பவதிவாளர் சங்கத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. டப்பிங், பாடல் பதிவுகள், படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Film Employees Federation of South India calls off strike on tomorrow
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil