»   »  மத்திய அமைச்சரிடம் 8 கோரிக்கைகளை முன்வைத்த பெப்சி... நிறைவேறுமா?

மத்திய அமைச்சரிடம் 8 கோரிக்கைகளை முன்வைத்த பெப்சி... நிறைவேறுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் 8 கோரிக்கைகளை பெப்சி(தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு) தலைவர் ஜி.சிவா முன் வைத்திருக்கிறார்.

பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு நேற்று வருகை புரிந்தார். அவரை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி தலைவர் சிவா மற்றும் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

FEFSI Demands 8 Requests to Federal Minister

1. மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

2.இலவச மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கிட வேண்டும்.

3. வாரிசுகளுக்கு கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும்.

4. வாரிசுகளுக்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும்.

5.பாரத பிரதமரின் சுரக்ஷா, பீம யோஜனா திட்டங்களின் கீழ் வாழ்நாள் காப்பீடு வழங்க வேண்டும்.

6.ஓய்வுதியம் வழங்க வேண்டும்.

7. மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த குறைந்த கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

8.அரசின் சாதனை மற்றும் விளம்பர படங்களில் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளை திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பெப்சி அமைப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.

இந்த கோரிக்கைகளை படித்துப் பார்த்த அமைச்சர், அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

English summary
FEFSI Demands 8 Requests to Federal Minister Pon.Radhakrishnan, He Assured that all the Demands made by the Relevant Departments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil