twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெப்சி - தயாரிப்பாளர் மோதல்... எப்போ முடியும்?

    By Shankar
    |

    சென்னை: சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. கடைசி முயற்சியாக இரு தரப்பினரும் வரும் 16-ம் தேதி பேச்சு நடத்தவிருக்கிறார்கள்.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையாளர், இரண்டு தரப்பினரையும் அழைத்துப் பேசினார். இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.

    அதைத் தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூடியாது. அதில், புதிய சம்பள விகிதம் பற்றி ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

    இதேபோல் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவும் நேற்று கூட்டப்பட்டது. அதில், ஏராளமான பட அதிபர்கள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில், தொழிலாளர்களின் சம்பளம் பற்றி ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பட அதிபர்கள்-'பெப்சி' தொழிலாளர்கள் இடையேயான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது.

    தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படுமா? என்பதை சினிமாவுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.

    English summary
    Fefsi - Film producers council are setting a new date for negotiations to settle their issues. Both the film bodies will meet on 16th of this month for the final talks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X