»   »  பெப்சி - தயாரிப்பாளர் சங்கம்... பஞ்சாயத்து தீர்ந்ததா?

பெப்சி - தயாரிப்பாளர் சங்கம்... பஞ்சாயத்து தீர்ந்ததா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பெப்சி தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக விளம்பரமும் வெளியானது.

இதனைக் கண்டித்து கடந்த 1-ம் தேதி முதல் பெப்சி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகிறது. இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது.

இதன்காரணமாக 'காலா', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதாக இருந்தது.

 பேச்சுவார்த்தை :

பேச்சுவார்த்தை :

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் உடன் பெப்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

 வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் :

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் :

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்குள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் எனவும் கூறினார்.

 விஷால் :

விஷால் :

பின்னர் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், "புதிய டெக்னிஷியன்களுக்கான அரிய வாய்ப்பு" என்ற விளம்பரத்தைத் திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

 ஆர்ப்பாட்டம் ரத்து :

ஆர்ப்பாட்டம் ரத்து :

இதனிடையே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்தது.

English summary
The Producers Council decided to replace Fefsi workers with new employees. Fefsi team is on indefinite strike since last week, denouncing it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil