twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சண்டை தீருது... ஷூட்டிங் மீண்டும் தொடங்குது!

    By Shankar
    |

    பெப்சி - தயாரிப்பாளர் இடையே சுமூக முடிவு எட்டப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

    தொழிலாளர் சம்பள ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக தமிழ் சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    தங்கள் சம்பளத்தை உயர்த்தக் கோரி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். உண்ணாவிரதமும் இருந்தனர்.

    ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் சிறு படங்களுக்கும் தனித்தனி விகிதங்களில் சம்பள உயர்வு நிர்ணயித்தனர். பெப்சி தொழிலாளர்கள் இதனை ஏற்கவில்லை.

    இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து அரசின் தொழிலாளர் நல ஆணையம் சமரசபேச்சு நடத்தியது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் இழுபறி நீடித்தது. இருசங்கத்தினரும் பொதுக்குழுக்களை கூட்டி ஆலோசித்தும் முடிவு எட்டப்படவில்லை. நேற்று மாலை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது.

    இன்று காலை நடந்த சம்பள பேச்சுவார்த்தையில் நடன கலைஞர்கள் சங்கத்துக்கும் ஸ்டன்ட் யூனியன் சங்கத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இன்று மாலை மேலும் 6 சங்கங்களுடன் உடன்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெப்சி யூனியனில் மொத்தம் 21 சங்கள் உள்ளன.

    இப்போது உடன்பாடு கண்ட 7 சங்கங்கள் தவிர மீதி சங்கங்களுக்கு நாளை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது. இதையடுத்து இன்று முதல் படப்பிடிப்புகள் துவங்கின.

    நிறுத்தப்பட்டிருந்த பல படப்பிடிப்புகள் ஆரம்பமாகிவிட்டன. இது தொழிலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    English summary
    The month long FEFSI - Producers tussle has settled today and 7 key unions have completed their talks with the producers successfully. The remaining unions will hold talks tomorrow. After this good news spread over the industry, shootings of various movies resumed immediately.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X