twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத் திரைப் படப்பிடிப்புகளுக்கு ஸ்ட்ரைக் இல்லை - பெப்சி அறிவிப்பு

    By Shankar
    |

    சின்னத் திரைத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் ஒத்துழைப்பு மற்றும் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, டிவி தயாரிப்புகளுக்கு மட்டும் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.

    தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை முறிந்ததாலும், போட்டி தொழிலாளர் சங்கத்தை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதாலும், காலவரையற்ற ஸ்ட்ரைக்கை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகிறது பெப்சி

    ஆனால் போட்டி சங்கத்தைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்போவதாக அறிவித்த தயாரிப்பாளர்களால் திட்டமிட்டதுபோல பெருமளவு ஷூட்டிங்குகளை நடத்த முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.

    இந்த நிலையில், இந்த ஸ்ட்ரைக்கால் சின்னத் திரையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சின்னத் திரை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பெப்சியிடம், இந்த ஸ்டைரைக்கை வாபஸ் பெறுமாறும், பெப்சியின் நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவு உண்டு என்றும் அறிவித்தனர்.

    இதனால், சின்னத் திரைப் படப்பிடிப்பு மட்டும் இனி தடையின்றி நடக்கும் என்று பெப்சி இன்று அறிவித்துள்ளது.

    சினிமாவைப் பொறுத்தவரை ஸ்ட்ரைக் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    FEFSI, the strong labour organisation in South Indian Cinema has announced that the strike has revoked for TV production and shootings, after small screendirectors and producers expressed their support to the union.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X