»   »  ஃபெப்சி ஸ்ட்ரைக்... காலா, மெர்சல் உள்ளிட்ட 35 படங்களின் ஷூட்டிங் தடங்கலின்றி நடக்குமா?

ஃபெப்சி ஸ்ட்ரைக்... காலா, மெர்சல் உள்ளிட்ட 35 படங்களின் ஷூட்டிங் தடங்கலின்றி நடக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று முதல் சினிமா தொழிலாளர்கள் அமைப்பு ஃபெப்சி அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குகிறது. ஆனால் தயாரிப்பாளர்களோ, எந்தத் தடங்களும் இல்லாமல் படப்பிடிப்புகள் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

இதனால் படப்பிடிப்புகள் நடக்குமா... அல்லது நிறுத்தப்படுமா என்பது தெரியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளது தமிழ் திரைத்துறை.

தயாரிப்பாளர்கள் - சினிமா தொழிலாளர்கள் இடையில் நிலவி வரும் சம்பளப் பிரச்சினை நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் பிரச்சினை எழும்போதெல்லாம் பேசித் தீர்த்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்து வந்தனர்.

விஷால் பிடிவாதம்

விஷால் பிடிவாதம்

ஆனால் இந்த முறை, ஒரேயடியாக ஃபெப்சியே வேண்டாம் என அறிவித்துவிட்டது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம். இதில் பாதி தயாரிப்பாளர்களுக்கே உடன்பாடில்லை. அதே நேரம் ஃபெப்சியின் சில அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று சில தயாரிப்பாளர்கள் கருதினர்.

இறங்கி வந்த ஃபெப்சி

இறங்கி வந்த ஃபெப்சி

இந்த நிலையில் ஃபெப்சி தரப்பில் பெருமளவுக்கு இறங்கி வந்துள்ளனர். அடாவடியாக பில்லா பாண்டி படப்பிடிப்பை நிறுத்திய டெக்னீஷியன் யூனியன் தலைவர் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அதேபோல எத்தனை பேர் வேலைக்கு வேண்டும் என்பதைத் தயாரிப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதையும் ஃபெப்சி ஒப்புக் கொண்டுள்ளது. மற்ற விஷயங்களைப் பேசித் தீர்க்கலாம் என ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.

வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம்

ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து பிடிவாதமாக ஃபெப்சி வேண்டாம் என்று கூறி வருவதால், இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

35 படங்கள்

35 படங்கள்

இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் காலா, விஜய்யின் மெர்சல், விஷால் நடிக்கும் துப்பறிவாளன் உள்ளிட்ட 35 படங்களின் படப்பிடிப்புகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஃபெப்சி ஸ்ட்ரைக்கால் இந்த படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை உள்ளது. மீறி தொடரும் படப்பிடிப்புகளை ஃபெப்சி உறுப்பினர்கள் தடுக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஆனால் தயாரிப்பாளர் சங்கமோ திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் தொடரட்டும் என்றும், படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எந்த இடையூறும் இல்லாமலிருக்க பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

எத்தனை இடங்களுக்கு பாதுகாப்புத் தர முடியும்? என்ற கேள்விக்குறியுடன் இன்றைய நாளைத் தொடங்கியுள்ளனர் இப்போது படம் பண்ணும் தயாரிப்பாளர்கள்.

English summary
Due Fefsi's strike from Today, there are 35 movie shooting including Rajini's Kala will be affected.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil