»   »  ஃபெப்சி ஸ்டிரைக்: காலா, மெர்சல் படப்பிடிப்பு ரத்து, விஷால் ஷூட்டிங் மட்டும்...

ஃபெப்சி ஸ்டிரைக்: காலா, மெர்சல் படப்பிடிப்பு ரத்து, விஷால் ஷூட்டிங் மட்டும்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெப்சி வேலைநிறுத்தப் போராட்டத்தால் காலா, மெர்சல் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள், சினிமா தொழிலாளர்கள் இடையேயான ஊதிய பிரச்சனைக்கு தீர்வே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சினிமா தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

FEFSI strike: Kaala, Mersal shootings cancelled

ஃபெப்சி ஆட்கள் இல்லாமல் வேறு ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். அதன்படி அவரது துப்பறிவாளன் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி இன்று நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா மற்றும் தளபதி விஜய்யின் மெர்சல் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஷாலின் துணிச்சலான முடிவை சில தயாரிப்பாளர்கள் பாராட்டினாலும், பலர் எதிர்க்கிறார்கள். சினிமாவை அழிக்க தனியாக யாரும் தேவை இல்லை விஷாலே போதும் என்கிறார்கள்.

English summary
Rajinikanth starrer Kaala and Vijay's Mersal shooting have been cancelled as FEFSI has started indefinite strike on august 1st over wage issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil