»   »  ஸ்டிரைக்: ஃபெப்சி, 'விஷால் அன்ட் கோ'வுக்கு ரஜினி வேண்டுகோள்

ஸ்டிரைக்: ஃபெப்சி, 'விஷால் அன்ட் கோ'வுக்கு ரஜினி வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்கமும், ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சனை தொடர்பாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஃபெப்சி அமைப்பினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

FEFSI strike: Rajini's request to FEFSI and producers' council

இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க உதவி செய்யுமாறு அவர்கள் ரஜினியிடம் கோரிக்கை விடுத்தனர். ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சந்திப்புக்கு பிறகு ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

எனக்கு பிடிக்காத சில சொற்களில் 'வேலைநிறுத்தம்' என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம்.

FEFSI strike: Rajini's request to FEFSI and producers' council

தயாரிப்பாளர் சங்கமும், ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Rajinikanth has requested FEFSI and TN film producers' council to solve the salary issue amicably.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil