»   »  ரஜினியை சந்தித்த ஃபெப்சி குழு: அவர் சொன்னால் மட்டும் விஷால் கேட்பாரா?

ரஜினியை சந்தித்த ஃபெப்சி குழு: அவர் சொன்னால் மட்டும் விஷால் கேட்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. செல்வமணி தலைமையில் 3 பேர் கொண்ட ஃபெப்சி குழு ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளது.

தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை தீர்வதாக இல்லை. சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

FEFSI team meets Rajinikanth: Asks for help

இந்த வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஃபெப்சி தலைவரான ஆர்.கே. செல்வமணி தலைமையில் 3 பேர் கொண்ட குழு ரஜினியை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசியுள்ளது.

இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது. திரைப்பட தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தீர்வு காண உதவுமாறு அந்த குழு ரஜினியை கேட்டுக் கொண்டுள்ளது.

English summary
FEFSI team has met Rajinikanth on wednesday at his Poes garden residence over the indefinite strike issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil