»   »  அம்மா வெற்றியை மனசார கொண்டாடுகிறோம்! - ஃபெப்சி

அம்மா வெற்றியை மனசார கொண்டாடுகிறோம்! - ஃபெப்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றியை மனசாரக் கொண்டாடுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (ஃபெப்சி) அறிவித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் பெரிய தொழிலாளர் அமைப்பு ஃபெப்சி. 24 திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த அமைப்பின் நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக ஜெயலலிதாவுக்கு நேரில் போய் வாழ்த்து தெரிவித்தனர்.

FEFSI wishes Amma for her historic win

இப்போது அதிமுக மீண்டும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் நேரில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஃபெப்சி விடுத்துள்ள அறிக்கையில், "முதலமைச்சர் அம்மா அவர்களின் வெற்றியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தொழிலாளர்களாகிய நாங்கள் மனசாரக் கொண்டாடுகிறோம்.

இதை அம்மாவைச் சந்தித்து தெரிவித்தபோது மகிழ்ச்சி அடைந்தார்கள். ஃபெப்சி தொழிலாளர்கள் சார்பில் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இந்த வரலாற்று சாதனைப் படைத்த அம்மாவை வாழ்த்தி செயற்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Film Employees Federation of South India - FEFSI has wished CM Jayalalithaa for her historic win in TN Elections.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil