»   »  ஃபெப்சி தொழிலாளர்களி்ன் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்.. இன்று முதல் படப்பிடிப்புகள் தொடக்கம்

ஃபெப்சி தொழிலாளர்களி்ன் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்.. இன்று முதல் படப்பிடிப்புகள் தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெப்சி - தயாரிப்பாளர் சங்கம் இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால், 12 நாட்களாக நடந்து வந்த ஸ்ட்ரைக் இன்று வாபஸ் பெறப்பட்டது. ரஜினியின் காலா உள்ளிட்ட அனைத்துப் படப்பிடிப்புகளும் இன்று காலை முதல் தொடங்கின.

சினிமா படப்பிடிப்புகளில் வெளியாட்களை வைத்து பணியாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி செப்டம்பர் 1ம் தேதி அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெப்சி கூட்டமைப்பு ஈடுப்பட்டது.

Fefsi withdraws strike

இதனால் ரஜினிகாந்த் நடிக்கும் காலா உட்பட 30 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 12 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பெப்சி கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே செல்வமணி மற்றும் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இடையே நேற்று இரவுப் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.

அப்போது பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதி அளித்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

இதனையடுத்து இன்று காலை முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

English summary
Fefsi has withdrawn its 12 day strike and all shooting are resumed from the morning

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil