நான் காதலில் விழுந்தேன்.. பின் வேதனை அடைந்தேன்.. துபாயில் இருந்து வெளிப்படுத்திய பிரபல நடிகை!

By

துபாய்: காதலில் விழுந்தேன், பிறகு என்னை நானே நேசிக்க கற்றுக்கொண்டேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை மீரா நந்தன். இவர் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில், வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரியநகரம் படங்களில் நடித்துள்ள மீரா நந்தன், சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

ரேடியோ ஜாக்கி

ரேடியோ ஜாக்கி

கடைசியாக, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கோல்ட் காய்ன் என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்த அவர், பிறகு நடிக்கவில்லை. துபாயில் ஒளிபரப்பாகும் மலையாள எஃப் எம் ஒன்றில், ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் குறைந்த அளவு ஆடை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோஸ் வைரலானது.

டிரெஸ் வேண்டாம்

டிரெஸ் வேண்டாம்

இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உங்களை ஹோம்லி லுக்கில் பார்க்கவே ஆசைப்படுகிறோம். அதுதான் உங்களுக்கு சரியானது, இந்த மாதிரி டிரெஸ் வேண்டாம் என்று கூறியிருந்தனர். இதற்குப் பதிலளித்த மீரா நந்தன், என் ஆடையின் அளவைக் கணக்கிட யாருக்கும் உரிமை இல்லை. அது என் விரும்பம் என்று கூறியிருந்தார்.

முதல் அனுபவங்கள்

முதல் அனுபவங்கள்

இந்நிலையில், தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய மீரா நந்தன், கூறியிருப்பதாவது: எனது இருபது வயதை, முழு மனதுடன் திரும்பிப் பார்க்கிறேன். அதில் அதிகம் கற்றுக் கொண்டேன். பல முதல் அனுபவங்களை அனுபவித்தேன். அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ரேடியோ ஜாக்கி

ரேடியோ ஜாக்கி

இப்போது எதையும் நான் மாற்றவில்லை. ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன். நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்தேன். பிறகு ரேடியோ ஜாக்கியாக துபாய்க்கு வந்தேன். இதை முழுவதும் நேசிக்கிறேன். சொந்தமாக வாழ்ந்து என் சுதந்திரத்தின் அன்பை கண்டேன்.

Recommended Video

96 படம்தான் என்னோட அடையாளம் | ACTRESS VARSHA BOLLAMMA | FILMIBEAT TAMIL
முதலில் குடும்பம்

முதலில் குடும்பம்

காதலில் விழுந்தேன். பின் வேதனை அடைந்தேன். முதலில் என்னை நேசிக்கக் கற்றுக் கொண்டேன். என்னவாக இருந்தாலும் முதலில் குடும்பம் என்பதை அறிந்துகொண்டேன். இந்த கொரோனா தொற்று மறைந்து நல்ல நாட்கள் வரும். எனது 20-கள் நன்றாக இருந்தது. என் 30 இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு மீரா நந்தன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X