»   »  பத்தவச்சது போதவில்லையே பரட்டை: ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்து குமுறும் நடிகைகள்

பத்தவச்சது போதவில்லையே பரட்டை: ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்து குமுறும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரகுல் ப்ரீத் சிங் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!- வீடியோ

சென்னை: கோலிவுட்டில் ரகுல் ப்ரீத் சிங் அடைந்துள்ள வளர்ச்சியை பார்த்து சில நடிகைகள் கடுப்பில் உள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் அவர் நடித்த படங்கள் ஓடாததால் அவரை ராசியில்லாத நடிகை என்று சக நடிகைகளே பரப்பிவிட்டார்கள்.

இந்நிலையில் அவர் கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் நடிக்கிறார். பத்தவச்சும் ரகுலின் மார்க்கெட் பிக்கப்பானதை பார்த்து சில நடிகைகள் கடுப்பில் உள்ளனர். இந்நிலையில் சினிமா குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது,

ரகுல்

ரகுல்

சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். இது குழந்தைகளுக்கும் பிடிக்கும். நான் ரஹ்மான் சார் இசையை எப்பொழுதும் கேட்பேன்.

கனவு

கனவு

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் சார் இசையமைக்கிறார் என்று தெரிந்ததும் என் கனவு நிறைவேறிவிட்டது போன்று உணர்ந்தேன். இந்த பட ஷூட்டிங் எப்பொழுது துவங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.

வித்தியாசம்

வித்தியாசம்

கார்த்தி படத்தில் நான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சினிமா என்றாலே பொழுதுபோக்கு தான். ரியலிஸ்டிக் படங்களில் நடித்துக் கொண்டே இருந்தால் எப்பொழுது டான்ஸ் ஆடுவது?

செல்வராகவன்

செல்வராகவன்

இந்த 3 படங்களிலுமே என் கதாபாத்திரம் வித்தியாசமானது. கலைஞர்களின் முழுத்திறமையை வெளிக்கொண்டு வருபவர் இயக்குனர் செல்வராகவன் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

English summary
Some actresses in Kollywood are jealous of Rakul Preet Singh as she has got offers to act with Suriya, Karthi and Sivakarthikeyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X