For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "தாயில்லாமல் நானில்லை" முதல் "நூறு சாமிகள் இருந்தாலும்" வரை.. சினிமாவில் அசத்திய ’அம்மா’பாடல்கள்!

  |

  சென்னை: அம்மா இல்லாமல் இந்த உலகத்தில் எந்தவொரு உயிரினமும் தோன்ற வாய்ப்பில்லை.

  கிட்டார் வாசித்து.. பாட்டு பாடி.. அட்வான்ஸ் அன்னையர் தின வாழ்த்து கூறிய.. மதன் பாபு குடும்பம்!

  கண்ணுக்குத் தெரிந்த கடவுளாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்து, பசி, தூக்கம் மறந்து, தன் ரத்தத்தை பாலாக ஊட்டி நமை வளர்ப்பவள் தாய் தான்.

  அடிமைப் பெண்ணில் எம்.ஜி.ஆர் பாடும் "தாய் இல்லாமல் நானில்லை" பாடல் தொடங்கி பிச்சைக்காரன் படத்தில் வரும் "நூறு சாமிகள் இருந்தாலும் அம்மாவை போல ஆகிடுமா" என பல பாடல்கள் அம்மாவின் அன்பையும் பாசத்தையும் அழகாக எடுத்துரைத்திருக்கின்றன.

  அவற்றில் சில முக்கியமான பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

  பண்டரி பாய் முதல் வரை.. ஐஸ்வர்யா ராஜேஷ் வரை சினிமாவில் கலக்கிய அம்மாக்கள்.. அன்னையர் தின ஸ்பெஷல்!பண்டரி பாய் முதல் வரை.. ஐஸ்வர்யா ராஜேஷ் வரை சினிமாவில் கலக்கிய அம்மாக்கள்.. அன்னையர் தின ஸ்பெஷல்!

  தாயில்லாமல் நானில்லை

  தாயில்லாமல் நானில்லை

  தாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. எனக்கொரு தாய் இருக்கின்றாள்! என்றும் என்னைக் காக்கின்றாள்! என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அடிமைப் பெண் படத்தில் பாடிய பாடல், பல தலைமுறைகளாக தாய்மையையின் சிறப்பை வலியுறுத்தி வருகிறது. அதே படத்தில் ‘அம்மா' என தமிழக மக்களால் அழைக்கப்படும் ஜெயலலிதா பாடும் ‘அம்மா என்றால் அன்பு' பாடலும் ரசிகர்களால் இன்னமும் ரசிக்கப்பட்டு வருகிறது.

  அம்மா என்றழைக்காத

  அம்மா என்றழைக்காத

  சூப்பர் ஸ்டார் ரஜினி, குஷ்பு, விஜயசாந்தி, பண்டரி பாய், விசு நடிப்பில் வெளியான மன்னன் படத்தில் வரும் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. அம்மாவை வணங்காது உயர்வில்லையே" பாடல் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் பாடலாக அமைந்து இருக்கிறது. கவிஞர் வாலியின் வரிகளில் இளையராஜா இசையில், கே.ஜே. ஏசுதாஸ் குரலில் உருவான அந்த பாடல் காலம் உள்ளவரை அழியாமல் இருக்கும்.

  நானாக நானில்லை தாயே

  நானாக நானில்லை தாயே

  உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான "நானாக நானில்லை தாயே" பாடலும் காலத்தில் அழியாத பாடலாக உலா வருகிறது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் வெளி யான இந்த பாடலையும் வாலிப கவிஞர் வாலி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  காலையில் தினமும்

  காலையில் தினமும்

  ஏ.ஆர். ரஹ்மான் இசையில் எஸ்.ஜே. சூர்யா நடித்து இயக்கிய நியூ படத்தில் வரும் "காலையில் தினமும் கண் விழித்தால்.. நான் கைதொழும் தெய்வம் அம்மா" என்ற பாடலை முணுமுணுக்காத தமிழ் சினிமா ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு அந்த பாட்டு அப்படியொரு ஹிட் அடித்தது. வியாபாரி படத்திலும் "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா" என்ற பாடலையும் எஸ்.ஜே. சூர்யா வைத்து தனது தாய் பாசத்தை காட்டியிருப்பார்.

  நீயே நீயே

  நீயே நீயே

  மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நதியா, பிரகாஷ் ராஜ், அசின், விவேக் நடிப்பில் வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி படத்தில் வரும் "நீயே நீயே.. தோழன் நீயே.. தாலாட்டிடும் என் தோழி நீயே.." என்ற அம்மா பாடலும் அம்மான்னா இப்படித்தான் ஸ்போர்ட்டிவ்வாக இருக்க வேண்டும் என்பதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உணர்த்தியது.

  அம்மா அம்மா

  அம்மா அம்மா

  அனிருத் இசையில் உருவான தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மாவாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன் கதாபாத்திரத்தின் மறைவுக்கு பின்னர் வரும் "அம்மா அம்மா.. நீ எங்கே அம்மா" என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. தனுஷ் வரிகளில் தனுஷ் மற்றும் எஸ். ஜானகி குரலில் அந்த பாடல் மெய் சிலிர்க்க வைத்திருக்கும்.

  நூறு சாமிகள்

  நூறு சாமிகள்

  "நூறு சாமிகள் இருந்தாலும்.. அம்மாவை போல ஆகிடுமா" என விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தில் வரும் பாடல், தாயின் உண்மையான பாசத்தையும், தேவையையும் பலருக்கும் உணர்த்தியிருக்கும். பெரிய பணக்காரனாக இருந்தாலும், தனது தாய்க்காக ஒரு மகன் பிச்சைக்காரனாக விரதம் இருக்கும் கதையை இயக்குநர் சசி இயக்கி மீண்டுமொரு சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளார்.

  English summary
  From MGR’s Adimai Pen “Thaayillaamal Naanillai to Vijay Antony’s Pichaikaaran “Nooru Saamigal” songs which portrays the Mother values in Tamil Cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X