வாடா-போடா விக்கிரமனுடன் கடும் மோதல்..2 வாரம்தான் ஆரம்பிச்சிட்டாரு அசீம்..பிக்பாஸ் வீடே எதிராய் போனது
கமல்ஹாசன் அறிவுரையை ஏற்று இரண்டு வாரம் அமைதி காத்து நடந்து கொண்டிருந்த அசீம் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்.
ராஜா-ராணி டாஸ்கில் ஏதாவது பிரச்சனை நடக்கும் ஏனென்றால் அதிகாரம் சம்பந்தப்பட்டது என்பதால் சண்டை மூளும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
அதை உண்மையாக்கும் விதத்தில் கேவலமான வார்த்தை ஒன்றை அசீம் பிரயோகிக்க கோபமே வராத விக்ரமன் வெகுண்டெழ ஆரம்பமானது வாடா போடா சண்டை.

வானிலை போல் மாறுவது பிக்பாஸ் மனநிலை
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மனநிலை வானிலை போல மாறிக்கொண்டே இருக்கும் என்று எழுதி இருந்தோம். வானிலையை விட மிக வேகமாக அவர்கள் மனநிலை மாறி வருவதை காண முடிகிறது. ஒருவருடைய இயல்பான குணம் முதலில் இரண்டு வாரங்களுக்கு வெளியே தெரியாது. போகப்போக வெளிப்படும் என்று தெரிவித்திருந்தோம் முதல் வாரம் அமைதியாக இருந்த அசீம் அடுத்தடுத்த வாரங்களில் தன்னுடைய சுயரூபத்தை கொடூரத்தை காண்பிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

2 வாரம் மட்டுமே ஒழுங்காக இருந்த அசீம்
கமல்ஹாசனால் கடுமையாக கண்டிக்கப்பட்ட அசீம் அதன் பின்னர் 2 வாரங்களில் அமைதி காத்தார். ஆனால் தன்னுடைய வழக்கமான, குழு உடன் ஒத்து போகாத மனநிலை தேவையில்லாத விஷயங்கள் மூக்கை நுழைப்பது போன்ற காரியங்களை தொடர்ந்து செய்து வந்தார். அவரது மாற்றத்தை மைனா உள்ளிட்டோர் நம்பாமல் ஒரு மனிதரை போல் சீக்கிரம் மாறிவிட முடியாது என்று விமர்சித்து வந்தனர்.

கமல்ஹாசன் பாராட்டியதால் தலைக்கனம் ஏறிய அசீம்
போனவாரம் கமல்ஹாசன் மற்றவர்களுக்கு அசீமை குறிப்பிட்டு அவர் எவ்வளவு அழகாக விளையாடுகிறார், மாறிவிட்டார் என்று பாராட்டி விட்டு சென்றார். அந்த பாராட்டுக்கு நான் தகுதியானவன் அல்ல என்பதை ஹஷீம் இந்த வாரம் நிரூபித்து விட்டார். ராஜா ராணி டாஸ்க்கில் ஆரம்பம் முதலே அதிகாரம் செலுத்திய அசீம் ராஜா ராணி உணவை சோதிப்பதில் அசட்டையாக இருந்ததை சுட்டிக்காட்டியபோது அதை ஏற்கமறுத்து அசீம் மீண்டும் கண்டபடி மீண்டும் சத்தம் போட்டு அனைவரையும் திட்ட ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் அசீமுக்கு எதிராக திரண்டது.

ஒட்டுமொத்த குடும்பமும் எதிரானது
விக்ரமனை அவதூறாக அசீம் பேச தடுக்கப்போன ஏடிகேவையும் பேச எப்படி என்னை பேசலாம் என ஏடிகே கேட்க, அயிஷா, தனலட்சுமி, ஷிவின் போன்றோரிடம் சண்டைப்போட பிக்பாஸ் குடும்பமே அசீமுக்கு எதிராக திரண்டது. ஒரு கட்டத்தில் கன்ஃபஷன் ரூமுக்கு போன அசீம் பிக்பாஸ் அறிவுரை ஏற்று மீண்டும் ஆட வந்தார். பின்னர் நிலைமை சீரானது.


Click it and Unblock the Notifications











