»   »  கொஞ்ச நாளா பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவே இல்லையே: ப்ரியா பவானிசங்கர்

கொஞ்ச நாளா பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவே இல்லையே: ப்ரியா பவானிசங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சண்டை போடுவதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக சண்டைகள், எமோஷன்கள் மிஸ் ஆகிறது என்று நடிகை ப்ரியா பவானிசங்கர் தெரிவித்துள்ளார்.

கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடர் மூலம் ஏக பிரபலமானவர் ப்ரியா பவானிசங்கர். தற்போது மேயாத மான் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக கூறப்பட்டது. இது குறித்து ப்ரியா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

இல்லை

இல்லை

நான் பிக் பாஸ் வீட்டிற்கு ஒருபோதும் போக மாட்டேன். 100 நாட்கள் எதையும் செய்யாமல் ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்? பிக் பாஸ் போட்டியாளர்கள் சண்டை போடுவதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது நல்ல டைம் பாஸாக உள்ளது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று 100 நாட்கள் இருப்பது என்பது சான்ஸே இல்லை.

டாஸ்க்

டாஸ்க்

துணி துவைப்பது, சமையல் செய்வது என்று பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் எனக்கு பிடிக்கவில்லை. சண்டைகள் நல்ல சுவாரஸ்யமாக உள்ளது.

மிஸ்

மிஸ்

கடந்த சில நாட்களாக சண்டைகள், எமோஷன்கள் மிஸ் ஆகிறது. பிக் பாஸ் வீட்டில் மீண்டும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு ஒத்து வராது என்றார் ப்ரியா.

English summary
Actress Priya Bhavanishankar said that fights and emotions tha are the highlights of Big Boss is missing for the past few days.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil