»   »  ஆபாசம்- காதல் அரங்கத்துக்குத் தடை

ஆபாசம்- காதல் அரங்கத்துக்குத் தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் களியாட்டக் காட்சிகள் நிறைந்த காதல் அரங்கம் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால் இப்படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பரபரப்பு இயக்குநர் வேலு பிரபாகரன் இயக்கியுள்ள படம் காதல் அரங்கம். பெங்களூரைச் சேர்ந்த ஷெர்லி தாஸ் படு கிளாமராக நடித்துள்ளார்.

இப்படத்தில் ஆபாச காட்சிகள் நிறைய இருப்பதாக கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள தணிக்கை வாரியத்தின் டிரிப்யூனலுக்குப் படத்தைக் கொண்டு சென்றார்.

இப்படத்தை டிரிப்யூனல் தலைவர் ஷோபா தீக்ஷித் தலைமையிலான குழுவினர் பார்த்தனர். கடந்த 5 நாட்களாக இப்படம் குறித்து தீவிர விவாதம் நடந்துள்ளது. இறுதியில் படத்தில் இடம் பெற்றுள்ள நிர்வாணக் காட்சிகள், ஹீரோவும், ஹீரோயினும் உடலுறவு கொள்வது போன்ற காட்சிளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

மேலும் இப்படத்தை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் திரையிடக் கூடாது என்று தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. படத்துக்குச் சான்றிதழ் வழக்கவும் டிரிப்யூனல் மறுத்து விட்டது.

இதுகுறித்து வேலு பிரபாகரன் கடும் கோபமடைந்துள்ளார். நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், கருத்துச் சுதந்திரத்தின் மீதான படுகொலை இது. இப்போதைய டிரெண்டுக்கேற்ப நல்ல சினிமாவைக் கொடுத்து அதன் மூலம் குற்றச் செயல்களைக் குறைக்க நான் செய்த முயற்சிதான் இந்த காதல் அரங்கம்.

ஆனால் எனது நோக்கத்தை யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். செக்ஸ் பாவம் அல்ல. அதை மறைக்க மறைக்கத்தான் இளைஞர்கள் மனதில் வக்கிரம் குடிபுகுந்து பல குற்றச் செயல்கள் நடக்கக் காரணமாகி விடுகிறது. எனவே செக்ஸை வெளிப்படையாக வையுங்கள் என்பதைத்தான் இப்படம் மூலம் நான் சொல்ல விரும்புகிறேன்.

உச்சநீதிமன்றத்தை அணுகி இப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க போராடப் போகிறேன் என்றார் பிரபாகரன்.

3 ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தை இயக்கி, தயாரித்தார் பிரபாகரன். ஷெர்லி தாஸ் நிர்வாணமாக தோன்றுவது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 5 காட்சிகளில் அவர் நிர்வாணமாக வருகிறார். திறந்தவெளியில் அவரும் ஹீரோவும் உடலுறவு கொள்வது போன்ற காட்சியையும் பிரபாகரன் வைத்துள்ளார்.

இப்படத்தில் பிரபாகரனும் பெரியார் வேடத்தில் சில காட்சிகளில் வந்து கருத்துக்களையும் சொல்லியுள்ளார். 2004ம் ஆண்டே இப்படத்தை இயக்கி முடித்து விட்டபோதிலும் சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது படத்துக்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil