»   »  செவாலியர் விருது பெறும் கமல்ஹாசனுக்கு மாபெரும் விழா: நடிகர் சங்கம் முடிவு

செவாலியர் விருது பெறும் கமல்ஹாசனுக்கு மாபெரும் விழா: நடிகர் சங்கம் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : செவாலியர் விருது பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு மாபெரும் விழா எடுக்க, தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதை மறைந்த நடிப்பு ஆசான் நடிகர் திலகம் டாக்டர் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு கொடுத்து கௌரவித்தது.

Film actors association to honour for Chevaliyar KamalHassan

அதே போல் இன்று எங்கள் சகோதரர் உலக நாயகன் டாக்டர் திரு .கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருதினை பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளதை தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் பாராட்டப்பட்ட திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அதே செவாலியர் விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.

செவாலியர் விருது பெற்ற நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு பெரும் விழா எடுத்து சிறப்பித்தது போல் , திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் மாபெரும் விழா எடுக்க விரும்புகிறோம். இது அவரை நேரில் சந்தித்த பிறகு முடிவாகும்.

செவாலியர் விருது கிடைத்த எங்கள் சகோதரர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அனைவர் சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
South india Film actors association announced function for Chevaliyar KamalHassan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil